Blogger இயக்குவது.

தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுத்து நிறுத்தாத மத்திய அரசைக் கண்டித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் 20/08/2013 அன்று தூத்துக்குடி மத்திய அரசின் வணிகவரி அலுவலக முன் கண்டன முற்றுகைப் போராட்டம்

திங்கள், 19 ஆகஸ்ட், 2013

இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுத்து நிறுத்தாத மத்திய அரசின் மெத்தனப் போக்கைக் கண்டித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி தூத்துக்குடியில் கண்டன முற்றுகைப் போராட்டம் நடைபெறும் என  தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கை:
1974 ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட இந்திராகாந்தி, ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தின் படி கச்சத்தீவை இலங்கையிடம் ஒப்படைத்ததால் தமிழக மீனவர்கள் நடுக்கடலில் மீன் பிடிக்கச் செல்லும் போது எல்லை தாண்டி மீன் பிடித்தனர், என்ற குற்றம் சாட்டி இலங்கைக் கடற்படையினரால் இதுவரையில் 600க்கும் மேற்பட்டவர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டனர், 400க்கும் மேற்பட்டவர்கள் சிறையில் அடைக்கப்பட்டு, தமிழக அரசின் நெருக்கடியினால் மத்திய அரசு இலங்கை அரசுடன் பேச்சு வார்த்தை நடத்தி விடு விக்கப்பட்டுள்ளனர், விவசாயிகள் , வணிகர்கள் மற்றும் அரசு பணியாளர்கள், இயற்கை  சீற்றத்தினால் பாதிக்கப்பட்ட போதிலும் அந்நிய நாட்டாரின் அச்சுறுத்தலின்றி அமைதியான முறையில் வாழ்ந்து வருகின்றனர்.ஆனால் கடல் நீரையே வாழ்க்கையின் ஜுவாதாரமாகக் கொண்டு நடுராத்திரியில் மீன் பிடிக்கச் செல்லும் கன்னியாகுமரி, தூத்துக்குடி, நாகப்பட்டினம, இராமநாதபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி விட்டனர் என்று இலங்கைக் கடற்படையினரால் அடிக்கடி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவதும், மீன்பிடி படகுகள் அடித்து நொருக்கப்படுவதும், மீனவர்கள், தாக்கப்படுவதும் வாடிக்கையாகிவிட்டது.

இராசபக்சேவின் கொடுங்கோல் ஆட்சியின் கீழ் இயங்கி வரும், இலங்கைக் கடற்படையினரின் தாக்குதல்களை மத்திய அரசு தடுத்து நிறுத்தி,மீனவர்களைக் காப்பாற்றத் தவறியதை வண்மையாகக் கண்டித்து  வருகின்ற 20.08.2013ம் தேதியன்று தூத்துக்குடியில் மத்திய அரசின் வணிகவரி அலுவலக முன்பு காலை 11 மணியளவில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பாக கண்டன முற்றுகைப் போராட்டம் நடைபெற உள்ளது, இந்த முற்றுகைப் போராட்டத்திற்கு தமிழ் உணர்வாளர்களும், இயக்கத்தின் அனைத்து  நிலைப் பொறுப்பாளர்களும், பங்கேற்று சிறப்பிக்கும்படி அன்புடன் கேட்டு கொள்கின்றேன்.

அன்புடன்

தி.வேல்முருகன்
நிறுவனர்
தமிழக வாழ்வுரிமைக் கட்சி

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP