திருப்பதி, காளஹஸ்தியை தமிழ்நாட்டுடன் இணைக்க கோரி ஆர்ப்பாட்டம்: தமிழக வாழ்வுரிமைக் கட்சி பங்கேற்பு
திங்கள், 12 ஆகஸ்ட், 2013
திருப்பதி, காளஹஸ்தியை தமிழ்நாட்டுடன் இணைக்க கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி பங்கேற்றது.
திருப்பதி, காளஹஸ்தி, சித்தூர், சத்தியவேடு மற்றும் கேரள மாநிலத்தில் உள்ள இடுக்கி ஆகிய பகுதிகளை தமிழ்நாட்டுடன் இணைக்க கோரி தமிழர் நில மீட்பு ஆர்ப்பாட்டம் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே 11/08/2013 நடைபெற்றது.
தமிழர் எழுச்சி இயக்கம் சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு பொதுச் செயலாளர் வேலுமணி தலைமை தாங்கினார். துணை பொதுச் செயலாளர் எழிலன், தியாகு, தமிழக வாழ்வுரிமைக் கட்சி துணை பொதுச் செயலாளர் சத்ரியன் து.வெ.வேணுகோபால், தமிழக வாழ்வுரிமைக் கட்சி தொழிற்சங்க தலைவர் சைதை சிவராமன், தென் சென்னை மாவட்ட அமைப்பாளர் ஜோசுவா, வில்லிவாக்கம் தேவராஜ், இளைஞரணி அப்துல் மற்றும் அருகோ, பாவேந்தன், கண்ணன், அருணபாரதி, தெய்வமணி உள்பட பல்வேறு தமிழ் அமைப்பை சார்ந்த பிரமுகர்கள் ஆர்ப்பாட்டதில் பங்கேற்றனர்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக