திட்டக்குடி அருகே மணல் குவாரிக்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழக வாழ்வுரிமை கட்சியினர் வியாழக்கிழமை (05.02.2015) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கடலூர் மாவட்டம், நெய்வாசல் வெள்ளாற்றில் பொதுமக்களின் குடிநீர் மற்றும் விவசாயத்துக்குத் தேவையான
நிலத்தடி நீர் மட்டத்தை குறைக்கும் வகையில் மணல் அள்ளப்படும் மணல் குவாரியை கண்டித்து ஆவினங்குடி பேருந்து நிறுத்தத்தில் தமிழக
வாழ்வுரிமைக் கட்சி சார்பில் வியாழக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலர் சின்னதுரை தலைமை வகித்தார். மங்களூர் ஒன்றியச் செயலர் ரெங்க.சுரேந்தர், நகரச் செயலர்
மருத.சீனிவாசன், நகரத் தலைவர் உ.முருகன், நல்லூர் ஒன்றியச் (கிழக்கு)
செயலாளர் தங்கவேல் முன்னிலை வகித்தனர். மாநில துணைப் பொதுச்செயலர் கனல்.கண்ணன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றுப்
பேசினார். நிறைவில் மாநில மாணவர் அணித் தலைவர் ரவிபிரகாஷ் நன்றி கூறினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக