வேட்டி, சட்டை அணிந்துவந்த நீதிபதிக்கு அனுமதி மறுக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்ட நிகழ்வுக்கு கண்டனம் தெரிவித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி சென்னியில் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
திங்கள், 14 ஜூலை, 2014
சென்னையில் உள்ள தமிழ்நாடு கிரிக்கெட் சங்க
கிளப்பில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி
பரந்தாமன், வழக்கறிஞர் ஆர்.காந்தி ஆகியோர் வேட்டி, சட்டையில் வந்த
காரணத்தினால் அனுமதி மறுக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்ட நிகழ்வுக்கு
கண்டனம் தெரிவித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம் அருகில் நேற்று 13.07.2014
நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு மாநில துணை பொதுச்செயலாளர் சத்ரியன் து.வெ.வேணுகோபால் தலைமை தாங்கினார். இணை பொதுச்செயலாளர் எம்.எஸ்.சண்முகம், மாநில பொருளாளர் அக்ரம்கான், துணைத்தலைவர் அ.வாசுதேவன், முத்துராஜ், சரவணன், வீரராகவன், அப்துல்சதீக், கதிர்வேல், வெங்கடேசன் உள்பட 40 பேர் பங்கேற்றனர்.
இதில் ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை வகித்த கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளர் சத்ரியன் து.வெ.வேணுகோபால் கூறியது:
‘‘தமிழர் பாரம்பரிய உடையை அவமதிப்பதாக அமைந்த இந்த செயல் கடும் கண்டனத்துக்குரியது. இதுதொடர்பாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்க கிளப் சார்பில் மன்னிப்பு கேட்க வேண்டும். மேலும், உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட வேண்டும்.
பின்னர் கிரிக்கெட் சங்கத்தினுள் நுழைய முயன்ற 50–க்கும் மேற்பட்டவர்களை காவல் துறையினர் கைது செய்து திருவல்லிக்கேணி காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்,

0 கருத்துகள்:
கருத்துரையிடுக