Blogger இயக்குவது.

வெங்காயம் விலை உயர்வை கண்டித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

புதன், 25 செப்டம்பர், 2013

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் சென்னை வள்ளூவர் கோட்டம் முன்பு 24/09/2013 அன்று வெங்காயம் விலை உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில துணை பொதுச் செயலாளர் சத்ரியன் து.வெ.வேணுகோபால் தலைமை தாங்கினார். மாநில இணை செயலாளர் போரூர் சண்முகம், மாநில தொழிற்சங்க செயலாளர் கே.வி.சிவராமன், துணைத் தலைவர் வாசுதேவன், இரா.ஏழுமலை, அயன்புரம் தேவராஜ், விருகை வீரராகவன், வெங்கடேஷ், அப்துல் சதீக், ஜோஸ்வா, சரவணன், மகளிரணி வெள்ளையம்மாள் உள்பட 500 பேர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டம் நடந்த இடத்தில் மக்களாட்சி அரசு கடை என்று எழுதி வெங்காயத்தை குவித்து வைத்திருந்தனர். அப்போது 1 கிலோ வெங்காயத்தை 2 ரூபாய்க்கு விற்று நூதன போராட்டம் நடத்தினர். இதன் அருகே மத்திய அரசு கடை என்று எழுதி 1 கிலோ வெங்காயத்தை 65 ரூபாய்க்கு விற்றனர். இதில் மக்களாட்சி அரசு கடையில் போட்டி போட்டு 50–க்கும் மேற்பட்ட பெண்கள் 2 ரூபாய் கொடுத்து வெங்காயம் வாங்கினார்கள்.

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் ஒவ்வொரு பொருட்களின் விலை உயர்வை அட்டையில் பட்டியலிட்டு எழுதி கண்டன கோஷம் எழுப்பினார்கள்.

ஆர்ப்பாட்டத்தில் சத்ரியன் து.வெ.வேணுகோபால் பேசியது:


வெங்காயத்தின் விலை உயர்வை கட்டுப்படுத்த அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லா விட்டால் தேர்தல் சமயத்தில் இது முக்கிய பிரச்சினையாக மக்கள் மத்தியில் எதிரொலிக்கும் என்றார்.



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP