தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் பர்கூர் சட்டமன்ற தொகுதி செயல்வீரர்கள் கூட்டம்
ஞாயிறு, 21 ஏப்ரல், 2013
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் பர்கூர் சட்டமன்ற தொகுதி செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் குணச்சந்திரன் தலைமை வகித்தார். மாநில தலைமை செயற்குழு உறுப்பினர் பாரத் ராமச்சந்திரன், மாவட்ட துணை செயலர் கோவிந்தராஜ், காவேரிப்பட்டணம் மேற்கு ஒன்றிய செயலாளர் பச்சப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மாநில துணை பொதுச்செயலாளர் ச.சி.விஜயகுமார் பங்கேற்று தீர்மான விளக்கவுரையாற்றினார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட தீர்மானங்கள்:
விவசாயிகள் நலன் கருதி படேதலாவ் ஏரி கால்வாய் திட்டத்தை ரூ. 7 கோடி மதிப்பில் துவங்கி தற்போது இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
மேலும், தென்பெண்ணை ஆற்றிலிருந்து நீர் கொண்டு வந்து 2 ஆயிரம் ஹெக்டேர் நிலம் பாசன வசதியை தரும் இந்த திட்டத்தை நிறைவேற்றிட வேண்டும்.
மேலும் இந்த கோரிக்கையை வலியுறுத்தி வரும் மே மாதம் 6-ஆம் தேதி மத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் எதிரே உண்ணாவிரத போராட்டம் நடத்துவது, மே மாதம் இறுதிக்குள் பர்கூர், ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதியில் உள்ள அனைத்து கிராமங்களிலும் கிளை அமைத்து கட்சியின் நிறுவனர் வேல்முருகனை அழைத்து கொடியேற்றுவது.
மேலும், ஓசூர் நகரத்திற்குள்பட்ட காந்தி நகர், வ.உ.சி நகர் ஆகிய பகுதிக்குள்பட்ட பாறை புறம்போக்கு இடங்களில் குடியிருக்கும் சுமார் 2 ஆயிரத்து 500 குடும்பங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க கோரி வருகின்ற 22-ஆம் தேதி ஓசூரில் நடைபெறவுள்ள அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் கிழக்கு மாவட்டத்திலிருந்து பெரும் திரளாக பங்கேற்பது.
வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் வழங்கிட தமிழக அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்வது
என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.
இதில், காவேரிப்பட்டணம் ஒன்றிய செயலாளர் பண்ணந்தூர் விஜய்பாபு, இளைஞரணி ஒன்றிய செயலாளர் மோகன், ஒன்றிய துணைத் தலைவர் ஓம்பிரகாஷ், விவசாய அணி ஒன்றிய தலைவர் முருகேசன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். இளம்புயல் பாசறை ஒன்றிய செயலர் மதிவாணன் நன்றி கூறினார்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக