Blogger இயக்குவது.

கள்ளக்குறிச்சி மாடூர் டோல்கேட் முறைகேடுகளை கண்டித்தும், அதனை மூட வலியுறுத்தியும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் முற்றுகைப் போராட்டம்

செவ்வாய், 23 ஏப்ரல், 2013

கள்ளக்குறிச்சி அருகே உள்ள மாடூர் டோல்கேட் முறைகேடுகளை கண்டித்தும், அதனை மூட வலியுறுத்தியும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் முற்றுகைப் போராட்டம்  திங்கள்கிழமை (22/04/2013)  நடைபெற்றது.

 தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் சுரேஷ்குமார் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் ராஜேஷ், ஒன்றிய செயலாளர்கள் குசேலன், தணசேகரன், மருதை, கார்த்திக், நகர செயலாளர்கள் குமரேசன், கதிர் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

ஒவ்வொரு டோல்கேட் இடைவெளி 48 கிமீ தூரத்தில் இருக்க வேண்டும். ஆனால்,  மாடூர் டோல்கேட், உளுந்தூர்பேட்டையில் இருந்து 35 கிமீ தூரத்திலேயே அமைக்கப்பட்டுள்ளது. எனவே தகுதியின்றி வாகனங்களிடம் வசூல் செய்யும் இந்த டோல்கேட்டை மூட வேண்டும், கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், சின்னசேலம், பகுதி மக்கள் பயன்படுத்த தனியாக மாநில சாலையை தமிழக அரசு அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதையடுத்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கட்சி நிர்வாகிகளை அலுவலகத்திற்கு அழைத்து சேலம் நெடுஞ்சாலைத்துறை திட்ட மேலாளர் சிவாஜி தலைமையில் பொறியாளர்கள் பிரபாகரன், சீனுவாசன் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், சின்னசேலம், தியாகதுருகம் உள்ளிட்ட பகுதி மக்களின் வாகனங்களுக்கு வரி வசூலிக்கக்கூடாது. விளைபயிர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு கட்டணம் வசூல் செய்யக்கூடாது.

சாலை திருப்பத்தில் ஒளிரும் விளக்குகளை அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. கோரிக்கைளை சில தினங்களில் நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். பேச்சுவார்த்தையின்போது கள்ளக்குறிச்சி வட்டாட்சியர் வே.ஜவகர், நெடுஞ்சாலைத்துறை வட்டாட்சியர் துளசிபாய், டோல்கேட் முதுநிலை மேலாளர் பாஸ்கர் ரெட்டி உடன் இருந்தனர்.






0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP