Blogger இயக்குவது.

சேலத்தில் பாலச்சந்திரனுக்கு சிலை எழுப்ப அனுமதி அளிக்க கோரி தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் மனு

செவ்வாய், 16 ஏப்ரல், 2013

இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனுக்கு சேலத்தில் சிலை எழுப்புவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் சேலம் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கபட்டுள்ளது.

இது குறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் பொதுச் செயலாளர் வை.காவேரி, ஒருங்கிணைப்புச் செயலர் எம்.பி.காமராஜ் உள்ளிட்டோர் மாவட்ட ஆட்சியர் க.மகரபூஷணத்திடம் திங்கள்கிழமை 15/04/2013  அளித்துள்ள மனு விவரம்:

இலங்கையில் நடைபெற்ற இனப் படுகொலையில் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் சிங்கள ராணுவ வீரர்களால் படுகொலை செய்யப்பட்டிருக்கிறான். இது தமிழகத்தில் வாழும் தமிழர்கள் மத்தியில் பெரும் அனுதாபத்தையும் இன உணர்வையும் ஏற்படுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து பாலச்சந்திரனின் நினைவைப் போற்றும் வகையில் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் சிலை வைக்க உள்ளோம். எனவே சேலம் ஐந்து ரோடு பகுதியில் பாலச்சந்திரனுக்கு சிலை வைக்க இடம் ஒதுக்கிக் கொடுக்க வேண்டும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP