Blogger இயக்குவது.

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சி தலைவர்களுக்கும் அரசு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி கோரிக்கை

புதன், 24 ஜூலை, 2013

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சி தலைவர்களுக்கும் அரசு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் - தமிழக வாழ்வுரிமைக் கட்சி கோரிக்கை:

சேலத்தில் படுகொலை செய்யப்பட்ட பாஜக மாநில பொதுச்செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் குடும்பத்தினருக்கு நேற்று (23/07/2013) தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் காவேரி, அமைப்புச் செயலாளர் காமராஜ் துணைப் பொதுச்செயலாளர்கள் சத்யமூர்த்தி, ஜெயமோகன், மாநில விளையாட்டு அணி செயலாளர் சரவணமூர்த்தி, மாவட்ட செயலாளர் வீராசாமி, சபரீஷ், ராஜ்குமார்  ஆகியோர் ஆறுதல் தெரிவித்தார்.

அப்போது தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் காவேரி அளித்த பேட்டி:

ஆடிட்டர் ரமேஷ் படுகொலை செய்யப்பட்டிருப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது. சேலம் மாநகரில் நடந்த இந்த கொடுமை ஒட்டுமொத்த தமிழகத்தையும் உறையச் செய்துள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் தலைவர்களுக்கும் பல்வேறு வழிகளில் ஆபத்து உள்ளது. எனவே அரசு அனைவருக்கும் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். கொலைச் சம்பவங்களை தடுக்க காவல் துறையை நவீனப்படுத்தி, கூடுதல் போலீசாரை பணியில் அமர்த்த வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP