Blogger இயக்குவது.

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் பண்ருட்டி கிழக்கு ஒன்றிய பொதுக்குழுக் கூட்டம்

ஞாயிறு, 1 செப்டம்பர், 2013


தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் பண்ருட்டி கிழக்கு ஒன்றிய பொதுக்குழுக் கூட்டம் காடாம்புலியூரில் நடந்தது.

கூட்டத்தில் ஒன்றிய செயலாளர் சிவக்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட பொறுப்பாளர்கள் பழனி, உக்கரவேல், என்.எல்.சி.அன்பழகன், ராசு முன்னிலை வகித்தனர். தி.திருமால்வளவன், மாநில துணைப் பொதுச் செயலாளர் கண்ணன், மாநில துணைத் தலைவர் சக்திவேல், மாவட்டச் செயலாளர் பஞ்சமூர்த்தி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் :

1. "தானே" மறுவாழ்வு திட்டத்தின் கீழ் இரண்டு ஏக்கர் நிலம் வைத்தவர்களுக்கும் இலவச விவசாய மின் மோட்டார் வழங்க வேண்டும்.

2. வி.கே.டி.தேசிய நெடுஞ்சாலையை விரைவில் துவங்க வேண்டும்.

3. விவசாயம், குடிநீருக்கு தினமும் 10 மணிநேரம் மின்சாரம் வழங்க வேண்டும்.

4. காடாம்புலியூர் ஊராட்சி வேலங்குப்பம், காட்டாண்டிக்குப்பம் இடையே பாலம் அமைத்து தார் சாலை அமைக்க வேண்டும்

என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.




0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP