Blogger இயக்குவது.

நெய்யாறு இடதுகரை சானல் பிரச்சினைக்கு தமிழக மக்கள் குரல் கொடுக்க வேண்டும் : தமிழக வாழ்வுரிமைக் கட்சி குமரி மாவட்ட பொறுப்பாளர் சுரேஷ்

புதன், 15 பிப்ரவரி, 2012

 http://mmimages.mmnews.in/Articles/2012/Feb/30bb1b55-8ae7-4521-91ea-974104669b4c_S_secvpf.gif

நாகர்கோவில்:
 
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் குமரி மாவட்ட பொறுப்பாளர் சுரேஷ் வெளியிட்டுள்ள அறிக்கை:

           9 ஆண்டுகளாக காய்ந்து, வறண்டு வெறிச்சோடி கிடக்கிறது நெய்யாறு இடதுகரை சானல் கால்வாய். பசுமை கொழித்த குமரி மாவட்டம் விளவங்கோடு தாலுகாவில் உள்ள 2500 ஏக்கர் விவசாய பூமி, வானம் பார்த்த மானாவாரி பூமியாக்கப்பட்டது. இன்றைக்கு கேரள முதல்-அமைச்சராக இருக்கும் உம்மன்சாண்டிதான் 2003-ம் ஆண்டிலும் முதல்-அமைச்சராக இருந்தார். அப்போதுதான் நெய்யாறு அணையின் ஷட்டரை பூட்டி, இடதுகரை கால்வாயை விரியோட வைத்து விளவங்கோடு விவசாயிகளின் வயிற்றில் நெருப்பை அள்ளிக்கொட்டினார்.

            குமரி மாவட்டம் ஆறுகாணி மலை அடிவாரத்தில் இருந்து காட்டாற்று வெள்ளம் பாய்ந்தோடி அணைமுகம் ஆற்றில் கலந்து, கேரள நெய்யாற்று அணையை நிரப்பி கேரளாவின் பல பகுதிகளுக்கும் போகிறது. தமிழகத்தில் உருவாகும் நெய்யாற்று நீர், தமிழகத்துக்கும் கொஞ்சம் பயன்படட்டுமே என்று 1962-ம் ஆண்டில் முதல்-அமைச்சராக இருந்த காமராஜரும், கேரள முதல்- அமைச்சர் சங்கரும் ஒப்பந்தம் போட்டனர். அந்த ஒப்பந்தம் காலாவதியாகி விட்டதாக பொய் சொன்னார் உம்மன்சாண்டி. உண்மையில் அந்த ஒப்பந்தத்தில் கால நிர்ணயம் எதுவுமில்லை. நெய்யாறு அணைக்கு வருகிற நீர், தமிழகத்து நீர். எனவே இடதுகரை கால்வாய் மூலம் குமரி மாவட்ட மக்களுக்கு நாம் காடுக்கும் நீரை எந்த காலத்திலும் எந்த அரசும் நிறுத்தி விடக்கூடாது என்று ஒப்பந்தம் போட்ட நாளில் மிகத்தெளிவாக பேசியிருக்கிறார் அன்றைய கேரள முதல்வர் சங்கர்.

          ஆகவே உம்மன்சாண்டி வேண்டுமென்றே தமிழகத்தை வஞ்சிக்கிறார், ஒப்பந்தங்களை மீறுகிறார். தேசிய ஒருமைப்பாட்டை மீறுகிறார் என்பது தெளிவான விஷயம். முல்லை பெரியாறு அணைக்கு ஆதரவு காட்டும் ஒட்டுமொத்த தமிழகமும் நெய்யாறு இடதுகரை சானல் பிரச்சினைக்காக குரல் கொடுக்க வேண்டும். குமரி மாவட்டம் ஆறுகாணி மலை அடிவாரத்தில் புதிய அணை கட்ட வேண்டும். தண்ணீர் பிரச்சினையில் கேரள அரசியல்வாதிகள் ஒற்றுமையாக செயல்படுவது போல் நாமும் ஒற்றுமையாக இருந்து நெய்யாறு கால்வாயின் குறுக்கே ஆறுகாணி மலை அடிவாரத்தில் அணை கட்ட துணை நிற்க வேண்டும். ஆறுகாணியில் அணை கட்டினால் இடதுகரை கால்வாய்க்காக கேரளாவை கெஞ்சவேண்டிய அவசியம் இல்லை.







0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP