மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளைக் கண்டித்து நடைபெறும் முழு அடைப்புப் போராட்டத்துக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி அதரவு
வியாழன், 20 செப்டம்பர், 2012
மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளைக் கண்டித்து நாடு தழுவிய அளவில் இன்று ( 20/09/2012) நடைபெறும் நடைபெறும் முழு அடைப்புப் போராட்டத்துக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி அதரவு தெரிவித்துள்ளது.
இது குறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் வெளியிட்டுள்ள செய்தி
மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளைக் கண்டித்து நாடு தழுவிய அளவில் நாளை நடைபெறும் முழு அடைப்புப் போராட்டத்துக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி தமது முழுமையான ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறது.
மூன்று மாதங்களுக்கு ஒரு முறை பெட்ரோல் விலை உயர்வை அறிவித்துக் கொண்டிருந்த மத்திய அரசு ஒரேடியாக டீசல் விலை உயர்வையும் சமையல் எரிவாயு கலன்கள் கட்டுப்பாட்டையும், மக்கள் மீது திணித்திருக்கிறது. அத்துடன் கோடிக்கணக்கான சிறு மற்றும் நடுத்தர வர்த்தகர்களின் வாழ்வில் மண்ணை அள்ளிப் போடும் வகையில் சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டுக்கு அனுமதி கொடுத்திருக்கிறது. பொருளாதார சீர்திருத்தம் என்ற பெயரில் மக்கள் மீது தாங்க முடியாத சுமைகளை சுமத்துவதுடன் வாழ்வாதாரத்தையே கேள்விக்குறியாக்கி பன்னாட்டு நிறுவனங்களுக்கு நாட்டின் விவசாயிகளையும் வர்த்தகர்களையும் அடிமைகளாக்கி விற்பனை செய்கிற போக்கை தமிழக வாழ்வுரிமைக் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.
நாடு முழுவதுமான மக்கள் கொந்தளிப்பின் எதிர்வினைதான் இன்றைய முழு அடைப்புப் போராட்டம்! நாடு தழுவிய அளவில் நடைபெறும் இந்தப் போராட்டம் ஒருநாள் போராட்டம் அல்ல... மக்கள் விரோத மத்திய அரசாங்கத்தின் அந்திம ஆட்சிக் கால நாட்களுக்காக அடிக்கப்பட்ட இருக்கும் எச்சரிக்கை மணி என்பதையும் சுட்டிக்காட்டுகிறோம்.
நாழு தழுவிய அளவில் இன்று நடைபெற உள்ள முழு அடைப்புப் போராட்டத்திற்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி தமது முழுமையான ஆதரவை வழங்கி பங்கேற்கிறது. அமைதியான முறையில் இன்றைய முழு அடைப்புப் போராட்டத்தை முழு அளவில் வெற்றி பெறச் செய்ய அனைத்து நேச சக்திகளும் முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக் கொள்கிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக