ராஜபக்சே இந்தியா வருகையைக் கண்டித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் தர்மபுரியில் ரயில் மறியல் போராட்டம்
புதன், 19 செப்டம்பர், 2012
தர்மபுரி:
ராஜபக்சே இந்தியா வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தர்மபுரியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி ரயில் மறியல் போராட்டம் 20/09/2012 அன்று நடைபெறும் என அறிவிக்கபட்டுள்ளது.
இலங்கை அதிபர் ராஜபக்சே இந்திய வருகையை கண்டித்து நடக்கும் போராட்டத்துக்கு, மாவட்ட தலைவர் செல்வம் தலைமை வகிக்கிறார். செயலாளர் முனிரத்தினம் வரவேற்கிறார். மாநில அமைப்பு செயலாளர் காமராசு, போராட்டத்தை துவக்கி வைக்கிறார். மாநில துணை பொது செயலாளர் தவமணி, துணை தலைவர் ராமலிங்கம், மகளிர் அணி செயலாளர் ஜெயலட்சுமி பாலு, வக்கீல் அணி துணை செயலாளர் சரவணன், இளைஞர் அணி துணை செயலாளர் சிவக்குமார், பாலகிருஷ்ணன், ரவிரத்தினம், சந்திரசேகர் ஆகியோர் கோரிக்கை குறித்து பேசுகின்றனர். மாவட்ட அமைப்பாளர் பன்னீர்செல்வம், செல்வம், முனியன், சிவபிரகாசம், பாபு, வஜ்ஜிரவேல், முனுசாமி, குமார், சின்னசாமி, பிரகாஷ், கவியரசு, மோகன், திருமாவளவன், பெருமாள், மாது, சரவணன், மாதேஷ், வடிவேல், திருப்பதி, ரமேஷ், ரவீந்திரன், ஞானப்பழம், லூகாஸ், சக்தி, ஜெகதீஸ், ஆனந்தன், செல்வம், தீர்த்தமலை, ராமசாமி, முருகன், பழனி, சரவணன், பெருமாள் உட்பட பலர் கலந்து கொள்கின்றனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக