இலங்கை ராணுவத்துக்கு பயிற்சி அளிப்பதை கண்டித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் திருச்சியில் ரயில் மறியல் போராட்டம்
வியாழன், 6 செப்டம்பர், 2012
திருச்சி:
இலங்கை ராணுவத்துக்கு பயிற்சி அளிப்பதை கண்டித்து திருச்சியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் ரயில் மறியல் போராட்டம் நேற்று (05/09/2012) நடைபெற்றது.
இலங்கை ராணுவத்துக்கு பயிற்சி அளிப்பதை கண்டித்தும், தமிழக அரசின் கோரிக்கைக்கு செவி சாய்க்காத பிரதமரை கண்டித்தும், திருச்சியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் திருச்சிஜங்ஷன் காதிகிராஃப்ட் அருகே நேற்று காலை கோஷம் எழுப்பியபடி ரயில்வே ஜங்ஷனுக்குள் நுழைய முயன்ற தமிழக வாழ்வுரிமைக் கட்சி தொண்டர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட ஏ.சி., காந்தி, இன்ஸ்பெக்டர் சிகாமணி தலைமையிலான போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.
பின்னர் மறியலில் ஈடுபட முயன்ற தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாநகர் மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், மாநில துணை செயலாளர் முத்து, ஒரு பெண் உள்ளிட்ட, நூற்றுக்கணக்கான தொண்டரகள் கைது செய்யப்பட்டு, பீமநகர் ஸ்பேர் பார்ட்ஸ் சங்கம் திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டனர். மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக