ராஜபக்சே இந்தியா வருகையைக் கண்டித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் அரியலூரில் ரயில் மறியல் போராட்டம்
வெள்ளி, 21 செப்டம்பர், 2012
அரியலூர்:
ராஜபக்சே இந்தியா வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து அரியலூரில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி ரயில் மறியல் போராட்டம் 20/09/2012 அன்று நடைபெற்றது.
மத்திய பிரதேச மாநிலம் சாஞ்சியின் நடக்கும் புத்தமத விழாவுக்கு வருகை தரும், இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் அரியலூர் மாவட்ட செயலாளர் வீராக்கண் சாமிநாதன் தலைமையில், கட்சி நிர்வாகிகள், அரியலூர் ரயில்வே நிலையத்தில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. மறியலுக்கு ரயில்வே நிலையத்திற்கு வந்த, தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாவட்ட செயலாளர் சாமிநாதன், மாவட்ட தலைவர் கொளஞ்சி, மாவட்ட இளைஞர் அணி தலைவர் செந்தில், ஒன்றிய செயலாளர்கள் செந்துறை பழனிவேல், சபாபதி, ஆண்டிமடம் தியாகராஜன், ஜெயங்கொண்டம் ரமேஷ், மீன்சுருட்டி முரளி, கருக்கை கணேசன், காடுவெட்டி காமராஜ், கொடுக்கூர் திருவள்ளுவன், ஜெயக்குமார், அறிவு உள்ளிட்ட 110 பேரை அரியலூர் டி.எஸ்.பி., தொல்காப்பியன் தலைமையிலான காவல்துறையினர் கைது செய்தனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக