Blogger இயக்குவது.

பேரூர் ஊராட்சியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றாததைக் கண்டித்து 22.01.2014 அன்று முசிறி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் உண்ணாவிரதம்

திங்கள், 13 ஜனவரி, 2014

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் திருச்சி மாவட்ட ஆலோசனைக் கூட்டம் முசிறியில் நடைபெற்றது.

ஆலோசனைக் கூட்டத்திற்கு வடக்கு மாவட்டச் செயலாளர் ராஜா தலைமை தாங்கினார். மாநகர மாவட்ட தலைவர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். ஒன்றிய செயலாளர் மோகன்ராஜ் வரவேற்றார். மாநில துணை பொதுச் செயலாளர் மனோகரன் பேசினார். மாவட்ட இளைஞரணி செயலாளர் சுரேஷ்ராஜா நன்றி கூறினார்.

ஆலோசனைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் :


1. முசிறி பகுதிகளில் காவிரி ஆற்று மணல்களை சேமித்து வைத்து மறுவிற்பனை செய்வதை தடைசெய்ய வேண்டும்,

2. கோமாரி நோய்க்கு பலியான கால்நடைகளுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும்,

3. பேரூர் ஊராட்சியில் அடிப்படை வசதிகளை செய்து தராத ஊராட்சித் தலைவர், ஊராட்சி ஒன்றிய ஆணையர் ஆகியோரை கண்டித்து வரும் 22ம் தேதி முசிறி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவது

உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP