Blogger இயக்குவது.

பாட்டாளி மக்கள் கட்சியை போட்டியாக கருதவில்லை - தமிழக வாழ்வுரிமைக் கட்சி தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி செயல்வீரர்கள் கூட்டத்தில் தி.வேல்முருகன் அறிவிப்பு

ஞாயிறு, 19 ஜனவரி, 2014

தமிழக வாழ்வுரிமைக் கட்சி தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி செயல்வீரர்கள் கூட்டம் 18.01.2014 அன்று நடைபெற்றது.

செயல்வீரர்கள் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் அவர்கள் பங்கேற்று ஆற்றிய சிறப்புரையாற்றினார்.

பின்னர்  தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிறுவனத்தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் 18.01.2014 அன்று அளித்த பேட்டி:

தமிழக மீனவர்களின் பிரச்சினை தொடர்பாக நிரந்தர தீர்வு காண வேண்டுமென்றால். கட்சத்தீவை நாம் மீண்டும் பெற வேண்டும். கட்சத்தீவை பெற தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. அந்த வழக்கில் கட்சத்தீவு இலங்கைக்கு சொந்தமென மத்திய அரசு அபிடவிட் தாக்கல் செய்துள்ளது. இந்த அபிடவிட்டை மத்திய அரசு திரும்ப பெறவேண்டும்.

தர்மபுரி மாவட்டத்தில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்திற்கு சுத்தம் செய்யப்படும் குடிநீர் போக மீதமுள்ள நீரை காவிரி ஆற்றில் திருப்பி விடுகின்றனர். அந்த நீரை விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் தர்மபுரி மாவட்டத்திற்கு திருப்பி விடவேண்டும். கெயில் நிறுவனம் விவசாய நிலங்களில் வாயு நிரப்பும் குழாய் பதிப்பதை உச்சநீதிமன்றம் தடை செய்துள்ளதை நாங்கள் வரவேற்கிறோம். 
வருகிற மார்ச் இறுதியில் ஐ.நா. சபையில் நடைபெற உள்ள மனித உரிமை மாநாட்டில் இலங்கைத் தமிழர், புலம் பெயர்ந்த ஈழத் தழிழர்களிடம் சுதந்திரமான பொது வாக்கெடுப்பு நடத்தவும், இலங்கை அதிபர் ராஜபட்ச மீது போர்க் குற்ற நடவடிக்கை எடுக்க இந்திய அரசு தீர்மானம் கொண்டு வர வேண்டும். இந்த மாநாட்டில் பங்கேற்க எனக்கு அழைப்பு வந்துள்ளது. தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை அளிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  தமிழகத்தில் எங்கள் கட்சியில் 7.5 லட்சம் உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில் 2.5 லட்சம் பேர் இணையதளம் மூலம் உறுப்பினர்களாகி உள்ளனர்.

சேலத்தில் பிப்ரவரி 23-ஆம் தேதி நடைபெறவுள்ள கட்சியின் மூன்றாம் ஆண்டு தொடக்க விழா மாநாட்டில் தேர்தல் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும். எங்களது கொள்கையுடன் ஒத்துப்போகும் கட்சிகளுடன் கூட்டணி ஏற்படுத்தப்படும்.

பாமக உள்ள கூட்டணியில் சேரமாட்டோம்: 

பாமகவை போட்டியாக கருதவில்லை. அதேவேளையில் அந்தக் கட்சி அங்கம் வகிக்கும் கூட்டணியில் இடம் பெற மாட்டோம். இழந்த தேர்தல் அங்கீகாரத்தை மீட்கும் நெருக்கடியில் பாமக உள்ளது. அதுபோன்ற நெருக்கடி எங்களுக்கு இல்லை.

காங்கிரஸ் மட்டும் எதிரி: 

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை எதிரியாக கருதுகிறோம். மக்களவைத் தேர்தலில் அந்தக் கட்சியுடன் கூட்டணி அமைக்கும் கட்சிகளும் எங்களுக்கு எதிரிதான்.









0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP