Blogger இயக்குவது.

சேலத்தில் நடைபெறும் மூன்றாமாண்டு தொடக்க விழாவில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி நாடாளுமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை அறிவிக்கப்படும்

சனி, 4 ஜனவரி, 2014

தஞ்சாவூர்:

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தஞ்சை நாடாளுமன்ற தொகுதி பொதுக்குழுக் கூட்டம் இன்று தஞ்சையில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள அக்கட்சியின் நிறுவனத் தலைவர் தி.வேல்முருகன் இன்று (04.01.2014) காலை ரயில் மூலம் தஞ்சைக்கு வந்தார்.

அப்போது அவருக்கு தஞ்சை ரெயில் நிலையத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் சில்லூர் ஆர்.பி.தமிழ்நேசன் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. வரவேற்பு நிகழ்ச்சியில் மத்திய மாவட்டச் செயலாளர் துரை. கார்த்திக்கேயன், தலைமை நிலைய செயலாளர் கனல்.கண்ணன், இளைஞரணி செயலாளர் பாபு, மாநில இளைஞரணி துணைச் செயலாளர் முகம்மது ஆரிப், மத்திய மாவட்ட பொருளாளர் ரவீந்திர நாயுடு, மத்திய மாவட்ட தலைவர் அண்ணா. வினோத், நகர செயலாளர் முகம்மது எகியா மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் தி.வேல்முருகன் அளித்த சிறப்பு பேட்டி:


தமிழக மீனவர்கள் கடந்த சில மாதங்களாக இலங்கை சிங்கள கடற்படையினரால் சுமார் 300க்கும் மேற்பட்டவர்கள் சிறைப் பிடிக்கப்பட்டு உள்ளனர். பல ஆண்டுகாலமாக 600க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கும் முன்பு தமிழக மீனவர்களின் 85 படகுகள் இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டு யாழ்ப்பாணத்தில் நிறுத்தப்பட்டு உள்ளது. இந்த நிலைப்பாட்டில் மத்திய அரசும், மத்திய உளவுத்துறை அமைக்கவும் உடனே தலையிட்டு சிறையில் இருக்கும் தமிழக மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும். பறிக்கப்பட்ட படகுகளை மீட்டுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழக மீனவர்கள் பிரச்சினையில் மத்திய அரசு அதிக அக்கறை எடுத்துக் கொள்ளாமல் இருக்கும் வேளையில், பாகிஸ்தான் நாட்டிற்கு ஒரு பிரச்சினை என்றால் உடனே அதில் தலையிட்டு தீர்த்து வைக்க முயற்சி செய்து வருகிறது. பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்கு பல்வேறு காரணங்களுக்காக வரும் நபர்களை பாதுகாப்புடன் அனுப்பவும், அவர்களுக்கு இந்திய அரசு சார்பில் முழு உதவிகள் செய்து அவர்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாமல் இருக்க பல்வேறு முயற்சிகளை மத்திய அரசு செய்து வருகிறது. இது தொடர்பாக ஒரு ஒப்பந்தத்தையும் மத்திய அரசு ஏற்படுத்தி உள்ளது. எல்லை தாண்டி இந்தியாவிற்கு வரும் நபர்கள் மீது அதிக அக்கறை எடுத்துக் கொள்ளும் மத்திய அரசு, ஏன் தமிழக மீனவர்கள் தாக்கப்படும் பிரச்சினைகளில் மட்டும் செவி சாய்க்காமல் உள்ளது என்பது கேள்வி குறியாக உள்ளது. எனவே, பாகிஸ்தான் நாட்டினரின் பாதுகாப்பில் கவனம் செலுத்தும் மத்திய அரசு தமிழக மீனவர்கள் பிரச்சினையிலும் அதிக அக்கறை செலுத்த வேண்டும்.

தமிழக மீனவர்களை பாதுகாக்கும் செயல்பாட்டில் மத்திய அரசு தவறும் பட்சத்தில், தமிழகத்தில் உள்ள கடற்படை போலீசார் மூலம் தமிழக மீனவர்களை பாதுகாக்க நிறுத்துவோம் என்ற அறிவிப்பை தமிழக முதல்வர் ஜெயலலிதா வெளியிட வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி தமிழக அரசை கேட்டுக் கொள்கிறது.

சென்னையில் சூப்பர் ஸ்பெசாலிட்டி என்ற மருத்துவமனை தமிழக அரசு சார்பில் திறக்கப்பட உள்ளது. இதில் மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் நியமனம் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் பின்பற்றப்பட வேண்டும். தமிழகத்தில் உள்ள சுமார் 20 மாவட்டங்களில் விவசாயத்திற்கு பெரும் பங்கு வகிக்கும் கால்நடைகள் கோமாரி நோய் தாக்குதலால் இறந்து வருகிறது. இறந்த கால்நடைகளுக்கு நிவாரணம் இது வரை வழங்கப்பட வில்லை. எனவே, இந்த நோய் தாக்குதலால் இறந்த மாடு ஓன்றுக்கு ரூ.20 ஆயிரமும், ஆடு ஒன்றுக்கு ரூ.10 ஆயிரமும் நிவாரணம் வழங்க வேண்டும்.

இந்தியாவின் கலாச்சாரம், பண்பாடு, நாகரீகத்தை இழிவுப்படுத்தும் வகையில் ஆணும், ஆணும் சேர்ந்து வாழலாம். பெண்ணும், பெண்ணும் சேர்ந்து வாழலாம் என்றும், ஓரினச்சேர்க்கையில் சேர்ந்து வாழ்வது குற்றம் அல்ல என்று கூறுவது இந்திய நாட்டின் பண்பாட்டை சீர் குலைக்கும் செயலாகும். இதனை தமிழக வாழ்வுரிமைக் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

தமிழகத்தில் உள்ள எந்த ஒரு அரசியல் கட்சிகளுக்கும் கொள்கை கோட்பாடுகள் என்பது கிடையாது. தேர்தலுக்காகவும், பதவிகளுக்காகவும் தான் கூட்டணிகளை வைத்துக் கொள்கிறார்கள். தமிழக மக்களின் நலனில் அவர்கள் அக்கறைக் காட்டுவது குறைவாக தான் உள்ளது. கூட்டணிகளை வைத்து மக்களை ஏமாற்றி தான் வருகிறார்கள். தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் 3–ம் ஆண்டு தொடக்க விழா வருகிற பிப்ரவரி 2–ந்தேதி சேலத்தில் நடைபெற உள்ளது. அப்போது வருகிற பாராளுமன்ற தேர்தலில் எந்த கட்சிகளுடன் கூட்டணி என்பதை அறிவிக்க உள்ளோம். எங்கள் கட்சியின் கொள்கைகளை மதித்து, எங்களுக்கு அழைப்பு விடுக்கும் கட்சிகளுடன் தான் நாங்கள் கூட்டணி வைப்போம். காங்கிரஸ் மற்றும் பா.ம.க. ஆகிய கட்சிகள் எந்த அணியில் இருக்கிறதோ அந்த அணியில் நாங்கள் கூட்டணி வைக்க மாட்டோம்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP