Blogger இயக்குவது.

தருமபுரி நாடாளுமன்றத் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் பி.எஸ்.மோகனை ஆதரித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் அவர்கள் பிரசாரம்

திங்கள், 31 மார்ச், 2014

தருமபுரி  நாடாளுமன்றத் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் பி.எஸ்.மோகனை ஆதரித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் அவர்கள் 30.03.2014 (ஞாயிற்றுக்கிழமை) அன்று பி.எஸ்.என்.எல். தொலைத் தொடர்பு துறை  அலுவலகம் முன்பு நடைபெற்ற பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு வாக்கு சேகரித்தார்.

கூட்டத்திற்கு மாநில உயர் கல்வித் துறை அமைச்சர் பி.பழனியப்பன், பாலக்கோடு சட்டமன்ற உறுப்பினர் கே.பி.அன்பழகன்,   தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் வை.காவேரி, அமைப்பு செயலாளர்  மே.ப.காமராஜ், இணைப் பொது செயலாளர் சண்முகம், துணை பொதுச் செயலாளர் சி.தவமணி, மாவட்டச் செயலாளர் முனிரத்தினம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் பேசியது:
உலகத்தில் தொன்மையான நாகரீகம் கொண்டது தமிழனின் நாகரீகம். ஆனால், இன்றைக்கு தமிழன் உலக அரங்கில் தலை குனிந்து வாழ வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டிருக்கிறான். தங்களது உரிமைகளுக்காக இலங்கையில் போராடிய தமிழ் உறவுகளை கொத்துக்கொத்தாக தடை செய்யப்பட்ட குண்டுகளை பொழிந்து அழித்தவர் இலங்கை அதிபர் ராஜபட்ச. அவருக்கு ராணுவ உதவி செய்தது காங்கிரஸ் மத்திய அரசு. அதற்கு உறுதுணையாக இருந்தவர் திமுக தலைவர் கருணாநிதி.

இந்தநிலையை மாற்றி தனித் தமிழ் ஈழம் அமைய வேண்டும். ராஜபட்சவுக்கு சர்வதேச நீதிமன்றம் மூலம் தண்டனை பெற்றுத் தரவேண்டும். இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்று வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானத்தை தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றி தமிழன் தலைநிமிர்ந்து வாழ வழி செய்தவர் தமிழக முதல்வர் ஜெயலலிதா. இந்தத் தீர்மானங்கள் அனைத்தும் அதிமுக தேர்தல் அறிக்கையிலும் இடம் பெற்றிருக்கின்றன.

60 ஆண்டுகால போராட்டத்துக்கு தேர்தல் அறிக்கையில் தீர்வு சொல்கிறார் ஜெயலலிதா. எனவே, அவர் இந்தியாவின் பிரதமராக வரவேண்டும். தமிழ் இனத்துக்கு துரோகம் செய்த காங்கிரஸ், திமுக ஆகிய கட்சிகள் வீழ்த்தப்பட வேண்டும். இதற்காக அனைத்துத் தரப்பினரும் அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டும்.

எதுவும் செய்யவில்லை:

தருமபுரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அன்புமணி, பாமக நிறுவனர் ராமதாஸ் ஆகியோர் தங்களது சமூகத்தின் பெயரைச் சொல்லி அரசியல் செய்து வருகின்றனர். ஆனால், அவர்கள் வெற்றி பெற்று பதவிக்கு வரும்போது அந்த சமூகத்துக்கு துரோகத்தை மட்டுமே செய்து வருகின்றனர். தேமுதிக தலைவர் விஜயகாந்தை விமர்சித்தவர்கள் இன்று தேர்தலுக்காக கூட்டணி அமைத்துள்ளனர் என்றார் அவர்.
















0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP