பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் மருதைராஜ் வெற்றிக்கு பாடுபடுவது என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்
செவ்வாய், 4 மார்ச், 2014
தா.பேட்டை:
திருச்சி மாவட்டம் முசிறியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
செயற்குழு கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ராஜா தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் மோகன்ராஜ் முன்னிலை வகித்தார். தொட்டியம் ஒன்றிய செயலாளர் சுப்ரமணியன் வரவேற்றார். மாநில துணை பொது செயலாளர் மனோகரன் கட்சியின் வளர்ச்சி பற்றியும், நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் கட்சியினர் ஆற்ற வேண்டிய பணிகள் பற்றியும் விளக்கி பேசினார். சதீஷ் நன்றி கூறினார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
1. முசிறி பகுதியில் மது அருந்திவிட்டு வாகனங்கள் ஓட்டி செல்வோர் மீது காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்,
2. அதிமுக பெரம்பலூர் மக்களவை தொகுதி வேட்பாளர் மருதைராஜ் வெற்றி பெற தமிழக வாழ்வுரிமைக் கட்சி தொண்டர்கள் பாடுபடுவது,
3. திருச்சியை வறட்சி மாவட்டமாக அறிவித்து விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய அரசை கேட்டு கொள்வது
உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக