Blogger இயக்குவது.

காஞ்சிபுரம் நாடாளுமன்றத் தொகுதி (தனி) அ.தி.மு.க வேட்பாளர் திருமதி.மரகதம் குமரவேலுவை ஆதரித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் அவர்கள் பிரசாரம்

வியாழன், 27 மார்ச், 2014

காஞ்சிபுரம் நாடாளுமன்றத் தொகுதி (தனி) அ.தி.மு.க வேட்பாளர் திருமதி.மரகதம் குமரவேல் அவர்களுக்கு ஆதரவாக 26.03.2014 (செவ்வாய்க்கிழமை) மாலை 7.00 மணி அளவில் உத்திரமேரூர் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் அவர்கள் வாக்கு சேகரித்தார்.

தேர்தல் பிரசார கூட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் பேசியது:

தினம் ஒரு அறிக்கை, வாழ்நாள் முழுவதும் கூட்டணி யாருடனும் இல்லை என கூறியவர்கள் தற்போது பாரதீய ஜனதா கட்சியுடன் கூட்டணி வைத்து போட்டியிடுகின்றனர். யாருடனும் கூட்டணி இல்லை எனக் கூறி வந்த ராமதாஸ் தன் மானத்தை அடமானம் வைத்து விஜயகாந்த் கட்சியுடன் கூட்டணி அமைத்து பா.ம.க பலம் வாய்ந்த தொகுதிகளை தாரை வார்த்து கொடுத்துவிட்டார். இது வன்னிய மக்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த கால காங்கிரஸ் ஆட்சியில் ஈழத்தமிழர்களின் வாழ்வை பாழடைத்து அதன் மூலம் சுயலாபம் அடைந்தது. இந்திய அரசின் முழு ஒத்துழைப்பு மூலமே இக் கொடுஞ்செயல் நடைபெற்றதாகவும் கூட்டணி கட்சிகளான தி.மு.க. கூட எவ்வித எதிர்ப்பையும் தெரிவிக்காமல் தனது சுயலாபத்தையே குறிக்கோளாக கொண்டு செயல்பட்டது.

இந்நிலையில் ராஜபக்சேவை சர்வதேச நீதிமன்றத்தில் போர் குற்றவாளியாக அறிவிக்கவும் அந்நாட்டின் மீது பொருளாதார தடைவிதிக்க தமிழக சட்ட மன்றத்தின் 110 விதியின் கீழ் தமிழர்களின் வாழ்வுரிமைக்காக உரத்தகுரல் பதிவு செய்தவர் தமிழக முதல்வர் ஜெயலலிதா. உலக தமிழர்களின் பாதுகாப்பு ஒன்றே அ.தி.மு.க.வின் குறிக்கோள் எனக் கூறும் அ.தி.மு.க.விற்கு அதை செயல்படுத்தும் விதத்தில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.விற்கு வாக்களிக்க வேண்டும். நெய்வேலி நிலக்கரி சுரங்க தொழிலாளர்கள் 40ஆயிரம் பேர் வாழ்வை மீட்டவர் ஜெயலலிதா தான்.

மேலும் தமிழகத்தில் அ.தி.மு.க.வின் சாதனைகளைக் கண்டு அஞ்சி பாரம்பரிய காங்கிரஸ் நிர்வாகி கூட தேர்தலில் நிற்க பயப்படும் நிலையில் உள்ளது. எனவே ஒட்டு மொத்த தமிழகத்தின் நிலைமாறவும் உலக அளவில் இந்தியா வளர்ச்சி காணவும் அ.தி.மு.க.விற்கு வாக்கு அளிக்க வேண்டும் என்றார்.

பிரசார கூட்டத்தில் தொகுதி பொறுப்பாளர்கள் சிட்லப்பாக்கம் இராஜேந்திரன், சட்ட மன்ற உறுப்பினர்கள் வி.சோமசுந்தரம், வாலாஜாபாத் பா.கணேசன் உட்பட பலர் பங்கேற்றனர்.


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP