Blogger இயக்குவது.

ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதி அ.தி.மு.க.வேட்பாளர் கே.என்.ராமச்சந்திரனை ஆதரித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் தேர்தல் பிரசாரம்

புதன், 26 மார்ச், 2014





ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் கே.என்.ராமச்சந்திரனை ஆதரித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் அவர்கள் தாம்பரத்தில் 25.03.2014 அன்று நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு வாக்கு சேகரித்தார். 

அப்போது தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் அவர்கள் பேசியது: 

 காவிரி நதிநீர் பிரச்னையில் கருணாநிதியால் செய்ய முடியாத சாதனையை மத்திய அரசிதழில் வெளியிட வைத்து சாதனை படைத்தவர் முதல்வர் ஜெயலலிதா. முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் தமிழகத்தை வஞ்சிக்க முயன்ற கேரள அரசைத் தடுத்து தட்டிக் கேட்டவர். தமிழகத்தின் நலனுக்காக தில்லியில் பிரதமர் கூட்டிய கூட்டத்தில் தனது மாநில மக்களின் தேவைக்கான கோரிக்கைகளை காது கொடுத்துக் கேட்கக் கூட அவகாசம் அளிக்காத மத்திய அரசைக் கண்டித்து வெளிநடப்பு செய்தவர் ஜெயலலிதா.

கூடங்குளம் அணுஉலை விவகாரத்திலும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் விவகாரத்திலும், இலங்கையில் தனி ஈழம் தொடர்பான விவகாரத்திலும் பாரதீய ஜனதா கட்சி ஆதரவு அளிக்க முன் வராத நிலையில் பாரதீய ஜனதா கட்சியுடன் வைகோ, ராமதாஸ், விஜயகாந்த் சந்தர்ப்பவாத கூட்டணி அமைத்துள்ளனர். பாரதீய ஜனதா கட்சி தேர்தல் அறிக்கையில் தனி ஈழம், போர் குற்றவாளியாக ராஜபக்சேவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்துவது குறித்த எந்த வாக்குறுதியும் இல்லை.

விஜயகாந்தை கேவலமாக பேசிய ராமதாஸ் இன்றைக்கு விஜயகாந்திடம் வட தமிழகத்தை தாரை வார்த்து விட்டார். தமிழ்நாட்டில் 5 வன்னியர்களை அமைச்சர்களாக்கி பெருமை சேர்த்தவர் ஜெயலலிதா. அ.தி.மு.க.வை ஒழிப்பேன் என்று கூறுகிறார் ராமதாஸ். அ.தி.மு.க. இரும்பு கோட்டை. யாராலும் அழிக்க முடியாது. தமிழகத்தில் 33 சதவீத ஓட்டுக்களுடன் தமிழ் இன உணர்வாளர்கள் 15 சதவீதம் ஓட்டும் பெற்று 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெறுவது உறுதி. ஜெயலலிதா பிரதமராவதும் உறுதி. தமிழகத்தின் நலனுக்காக செயல்பட்டு வரும் முதல்வர் ஜெயலலிதாவின் கரத்தை வலுப்படுத்த அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்றார்.

கூட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர்அமைச்சர் டி.கே.எம். சின்னையா, மாநில எம்.ஜி.ஆர்.இளைஞரணி செயலாளர் அலெக்ஸாண்டர், நகர மன்ற தலைவர் கரிகாலன், துணை தலைவர் கோபிநாதன், அண்ணா தொழிற்சங்க செயலாளர் கூத்தன், மாவட்ட பிரதிநிதி பரசுராமன், நகர துணை செயலாளர் என். கிருஷ்ண மூர்த்தி, கவுன்சிலர்கள் மார்க்கெட் பாபு, வேலு, சேலையூர் சங்கர், சத்யா, அ.தி.மு.க. நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP