Blogger இயக்குவது.

வி.பி.சிங், தேவ கௌடா போல மக்களவைத் தேர்தலுக்கு பின்பு ஜெயலலிதா பிரதமராவார் - தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி. வேல்முருகன் பேட்டி

சனி, 29 மார்ச், 2014

கிருஷ்ணகிரியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத்  தலைவர் பண்ருட்டி தி. வேல்முருகன் அவர்கள் 28.03.2014 (வெள்ளிக்கிழமை) அன்று  செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக அதிக இடங்களில் வெற்றி பெரும். அப்போது, தேவ கௌடா, வி.பி.சிங், போன்றோர் பிரதமரானது போல  தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமராக வாய்ப்பு உள்ளது. எனவே, வாக்காளர்கள் அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டும். தமிழகத்தின் உரிமையைக் காப்பதுடன், நதிநீர் உரிமையைப் பெறுவோம் என ஜெயலலிதா தெரிவித்ததால், அவரை தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஆதரிக்கிறது. கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட தொகுதிகளில் போட்டியிடும் பாமக வேட்பாளர்கள் தோல்வியைச் சந்திப்பார்கள்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு தேசிய கட்சி, திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைக்கமாட்டேன் என பாமக நிறுவனர் தலைவர் ராமதாஸ் கூறினார். ஆனால், அதற்கு மாறாக இப்போது தேசிய கட்சியான பாஜக, திராவிட கட்சிகளான தேமுதிக, மதிமுக ஆகிய கட்சிகளுடன் கூட்டணி வைத்துள்ளார். இது அவரது சந்தர்ப்பவாத சுயநலக் கூட்டணியாகும். 

தமிழகத்தில் உள்ள 20சத இளைஞர்கள் அதிமுகவுக்கு வாக்களிக்க உள்ளனர். வன்னிய சமுதாயத்தினர் யாரும் பாமகவுக்கு வாக்களிக்க மாட்டார்கள். கிருஷ்ணகிரி தொகுதியில் போட்டியிடும் ஜி.கே.மணியும், தருமபுரி தொகுதியில் போட்டியிடும் அன்புமணி ராமதாசும்  வெளி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். சம்பந்தப்பட்ட தொகுதியின் வாக்காளர்கள் உள்ளூர் வேட்பாளருக்கே வாக்களிப்பார்கள். இதனால், உள்ளூரைச் சேர்ந்த அதிமுக வேட்பாளர்களான கிருஷ்ணகிரி கே.அசோக்குமார், தருமபுரி மோகன் ஆகியோர் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்கள் என்றார் அவர்.

பேட்டியின் பொது மாவட்டப் பொறுப்பாளர் விஜயகுமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP