தருமபுரி நாடாளுமன்றத் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் பி.எஸ்.மோகனை ஆதரித்து தருமபுரியில் தமிழக வாழ்வுரிமைக்
கட்சி மற்றும் அ.தி.மு.க சார்பில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் 30.03.2014 (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடைபெறுகிறது.
பி.எஸ்.என்.எல் தொலைத் தொடர்பு துறை அலுவலகம் அருகே நடைபெறும் கூட்டத்துக்கு தமிழக
வாழ்வுரிமைக் கட்சி மேற்கு மாவட்டச் செயலாளர் கு.முனிரத்தினம் தலைமை
வகிக்கிறார். அதிமுக நகரச் செயலாளர் பி.குருநாதன் வரவேற்கிறார். தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன், மாநில
உயர்கல்வித் துறை அமைச்சர் பி.பழனியப்பன் ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர். அதிமுக மாவட்டச் செயலாளர் கே.பி.அன்பழகன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி
மாநில அமைப்பு செயலாளர் மே.ப.காமராஜ், துணை பொதுச் செயலாளர் சி.தவமணி
உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக