கோயம்பேடு வணிக வளாகம் அருகே உள்ள ‘ஏ’ ரோட்டில் உள்ள 4 அரசு மதுபானக்கடைகளை அகற்ற வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் மதுபானக்கடைகளுக்கு பூட்டு போடும் போராட்டம்
வியாழன், 6 மார்ச், 2014
வணிக வளாகம் அருகே உள்ள ‘ஏ’ ரோட்டில் 4 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்த
கடைகளுக்கு வரும் குடிமகன்களால், அப்பகுதி மக்கள் கடுமையாக
பாதிக்கப்படுகின்றனர். இவற்றை அகற்ற வேண்டும் என கோரிக்கை
வைக்கப்பட்டது. ஆனால் அதிகாரிகள் கண்டுகொள்ளாததால், தமிழக வாழ்வுரிமைக்
கட்சி அகில இந்திய ஜனநாயக
மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், சேமாத்தம்மன் நகர்
குடியிருப்போர் நல சங்கம் இணைந்து கடந்த ஜனவரி
29ம் தேதி கோயம்பேடு மார்க்கெட் ஏ ரோடு பகுதியில் உள்ள 4 டாஸ்மாக் கடைகளை
அகற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது அங்கு வந்த கோயம்பேடு
போலீசார் மற்றும் டாஸ்மாக் அதிகாரிகள் இந்த பகுதியில் உள்ள 4 டாஸ்மாக்
கடைகளும் 20 நாளில் அகற்றப்படும் என உறுதியளித்தனர். ஒரு மாதம் கடந்தும்
இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை.
இந்நிலையில் கோயம்பேடு அருகருகே உள்ள 4 அரசு மதுபானக்கடைகளை அகற்ற வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக்
கட்சி மற்றும் இந்திய வாலிபர் சங்கம் சார்பில் 04.03.2014
(செவ்வாய்க்கிழமை) மதுபானக்கடைகளுக்கு பூட்டு போடும் போராட்டம் நடைபெற்றது. இதில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில துணை பொதுச் செயலாளர் சத்ரியன்
து.வேணுகோபால் தலைமையில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் போரூர் எம்.எஸ்.
சண்முகம், மாநில அமைப்பாளர் கொற்றவ மூர்த்தி, மாவட்ட செயலாளர்கள் தேவராஜ்,
பூக்கடை முத்துராஜ், அப்துல்லா, ஜோசுவா, வீரராகவன், சரவணன், வெள்ளையம்மாள்
உட்பட 500 பேர் ஊர்வலமாக வந்து மதுபானக்கடைகளை முற்றுகையிட்டு
மதுபானக்கடையினை பூட்டினர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுப்பட்ட 500 பேரை
காவல்துறையினர் கைது செய்தனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக