Blogger இயக்குவது.

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் இணையத்தள ஆதரவாளர்கள் சந்திப்பு செப்டம்பர் 25 ல் வடலூரில் நடைபெறும் என அறிவிப்பு

திங்கள், 2 செப்டம்பர், 2013

கடலூர் மாவட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாணவர் பாசறை ஆலோசனைக் கூட்டம்  கடலூரில் ஞாயிற்றுக்கிழமை (01/09/2013) நடைபெற்றது.

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில மாணவரணி துணைச்செயலர் ப.அருள்பாபு தலைமை தாங்கினார். மாவட்ட மாணவரணிச் செயலர் ச.முத்துக்குமார் முன்னிலை வகித்தார். பொறியாளர் தி.கண்ணன் பேசினார். மாணவரணி நிர்வாகிகள் அ.கொளஞ்சி, மாரியப்பன், ராம்ஜி, கு.அருணாச்சலம், ராம்பிரகாஷ், ஜான்பால், டி.பாபு, ராஜேஷ், கெளதம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் :

1. இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்திய பிரதமரோ, அதிகாரிகளோ பங்கேற்கக் கூடாது.

2. தமிழர்களின் உணர்வுகளுக்கு மத்திய அரசு மதிப்பளிக்க வேண்டும்.  தமிழர்களை இழிவுபடுத்தும் வகையில் எடுக்கப்பட்டுள்ள மெட்ராஸ் கபே திரைப்படத்தை வெளியிட தடைவிதிக்க வேண்டும்.

3. மாணவர்கள் அனைவருக்கும் உடனடியாக மடிக்கணினி வழங்க வேண்டும்.

4.. மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் அனைவருக்கும் உடனடியாக கல்வி உதவித்தொகை வழங்க வேண்டும்.

5. செப்டம்பர்  25-ஆம் தேதி வடலூரில் நடைபெறும் இணையதள ஆதரவாளர் சந்திப்பிலும், செப்டம்பர் 29-ஆம்  தேதி விருத்தாசலத்தில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் மாணவரணி சார்பில் பெருமளவில் பங்கேற்பது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP