புதுவை வந்த குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் கறுப்புக் கொடி காட்டும் போராட்டம்
புதன், 25 செப்டம்பர், 2013
இலங்கை
அரசால் கைது செய்யப்பட்ட தமிழக–புதுவை மீனவர்களை மீட்கவேண்டும், காமன்
வெல்த் மாநாட்டிலிருந்து இலங்கையை வெளியேற்ற வேண்டும், இலங்கைக்கு
போர்கப்பல் வழங்க கூடாது என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி
புதுவை மாணவர் கூட்டமைப்பு சார்பில் புதுவை வரும் குடியரசுத்தலைவர் பிரணாப்
முகர்ஜிக்கு கறுப்பு கொடி காட்டும் போராட்டம் நடைபெற்றது.
இன்று (25/09/2013) காலை 8 மணியளவில் லாஸ்பேட்டை விமான நிலையத்திலிருந்து புதுவை பல்கலைக்கழகம் செல்லும் வழியில் குடியரசுத்தலைவர் பிரணாப்முகர்ஜிக்கு கறுப்புக்கொடி காட்ட முயன்ற தமிழக வாழ்வுரிமைக் கட்சி புதுவை மாநில தலைவர் ஸ்ரீதர், புதுவை மாணவர் கூட்டமைப்பு தலைவர் சாமிநாதன், பெற்றோர்–மாணவர் சங்க தலைவர் ராஜ்பவன் வை.பாலா, சட்டக்கல்லூரி மாணவர்கள் கவுதம பாஸ்கரன், இதயவேந்தன் மற்றும் தந்தைபிரியன், ராஜா உள்பட 50க்கும் மேற்பட்டோரை ஒதியஞ்சாலை போலீசார் அண்ணாசிலையருகே அவர்களை கைது செய்தனர்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக