Blogger இயக்குவது.

தருமபுரி மாவட்டத்தில் அமலில் உள்ள 144 தடை உத்தரவை உடனடியாக நிர்வாகம் ரத்து செய்ய தமிழக வாழ்வுரிமைக் கட்சி கோரிக்கை

புதன், 23 அக்டோபர், 2013

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தருமபுரி மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கட்சி அலுவலகத்தில் இன்று (23.10.2013) புதன்கிழமை நடைபெற்றது.

ஆலோசனைக் கூட்டத்தில் மாநிலப் பொதுச்செயலர் வை.காவேரி பேசியது:

தருமபுரி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக அமலில் உள்ள 144 தடை உத்தரவு அனைத்துத் தரப்பினரையும் பாதிக்கிறது. எனவே, இந்த தடை உத்தரவை உடனடியாக மாவட்ட நிர்வாகம் ரத்து செய்ய வேண்டும். மக்களவை தேர்தலில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிலைப்பாடு குறித்து அனைத்து மாவட்ட நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்து பிறகு கட்சியின் நிறுவனர் தி.வேல்முருகன் அறிவிப்பார். மேலும், நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட உள்ள வேட்பாளர்களை பாமக அறிவித்துள்ளது. இதில் அந்தக் கட்சியின் மாநிலத் தலைவர் ஜி.கே.மணி கிருஷ்ணகிரியில் போட்டியிட உள்ளதாகவும், தருமபுரியில் அன்புமணி போட்டியிடுவார் எனவும் தெரிகிறது. தொகுதிகளுக்கும், மக்களுக்கும் தொடர்பில்லாத இவர்களை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP