Blogger இயக்குவது.

அணுசக்திக்கு எதிரான மக்கள் கூட்டமைப்பின் சார்பில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் வேல்முருகன் தலைமையில் ஆர்ப்பாட்டம்

வியாழன், 3 அக்டோபர், 2013

விழுப்புரம்:
 
கூடங்குளம் அணு உலையை மூட வேண்டும் என்று விழுப்புரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கூடங்குள வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் வேல்முருகன் பேசினார்.

ஆர்ப்பாட்டம்

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர்  அலுவலக பெருந் திட்ட வளாகம் முன்பு 02/10/2013 அன்று மாலை பேரழிவை உண்டாக்கும் கூடங்குளம் அணு உலையை மூடக்கோரியும், இதற்காக போராடும் மக்கள் மீது போடப்பட்ட பொய் வழக்கை உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி திரும்ப பெற வலியுறுத்தியும் தமிழக வாழ்வுரிமை கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, ம.தி.மு.க., பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்கம், நாம் தமிழர் கட்சி, த.மு.மு.க., தமிழ் இளைஞர் கூட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் க் கட்கன் தலைமை தாங்கினார். ம.தி.மு.க. ஏ.கே.மணி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி ராம.ரவிஅலெக்ஸ், குமரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் வேல்முருகன் பேசியது:–

அணு உலை வேண்டாம்

கர்நாடகத்தில் அணு உலை கொண்டு வர திட்டமிட்டார்கள். ஆனால் அங்குள்ள மக்கள் ஒன்றுகூடி போராடி அதை வரவிடாமல் தடுத்தனர். அப்படிப்பட்ட அணு உலையை நம் நாட்டு மக்களை ஏமாற்றி கொண்டு வந் துள்ளனர். அதை தடுக்கக் கோரி அங்குள்ள மீனவர்கள் தங்கள் வாழ்வுரிமைக்காக போராடுகிறார்கள். ஆனால் அவர்கள் மீது வழக்கு தொடுத்துள்ளனர். இது எந்த விதத்தில் நியாயம். இந்திய அரசு 15 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்து உலக நாடு களோடு ஒப்பந்தம் செய்து மக்கள் உயிரைப்பற்றி கவலைப் படாமல் அணு உலைக்கான திட்டங்களை தீட்டியுள்ளனர். இந்த 15 ஆயிரம் கோடி ரூபாயை இந்த திட்டத்திற்கு பதிலாக வேறுவிதமான பயன்பாட்டிற்கு பயன்படுத்த வேண்டும்.

ஒற்றுமையோடு குரல் கொடுக்க...

காவிரி, பாலாறு, முல்லைப் பெரியாறு, கச்சத்தீவு பிரச் சினைகளில் எங்கள் உரிமையை கேட்டால் தர மறுக்கிறார்கள். ஆனால் கூடங்குளத்தில் அங்குள்ள மீனவர்களை கொன்று குவிக்க அணுஉலையை கொண்டு வந்துள்ளனர். மத்திய அரசே, அணு உலையை இழுத்து மூட வேண்டும். எங்கள் மக்களின் உரிமையை புரிந்துகொண்டு மத்திய அரசு செயலாற்ற வேண்டும். தமிழ் சமூகம் ஒற்றுமையோடு நின்று குரல் கொடுக்க தயாராகுவோம். இவ்வாறு அவர் பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் மனித நேய மக்கள் கட்சி முஸ்தாக்தீன், நாம் தமிழர் கட்சி தேசிங்கு, நூறு பூக்கள் அறக்கட்டளை பழமலய், திராவிடர் விடுதலை கழகம் அய்யனார், மக்கள் பாதுகாப்பு கழகம் ரமேஷ், தமிழ் இளைஞர் கூட்டமைப்பு எழில்.இளங்கோ, த.மு.மு.க. அபுபக்கர் அஜ்மல் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் மக்கள் உரிமை கூட்டமைப்பு தமிழ் வேங்கை நன்றி கூறினார்.





0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP