Blogger இயக்குவது.

இலங்கை சிறையில் உள்ள 210 தமிழக மீனவர்களை விடுதலை செய்யக்கோரி தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் 03.01.2014 அன்று சென்னை சுங்கத்துறை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம்

சனி, 28 டிசம்பர், 2013

இலங்கை சிறையில் உள்ள 210 தமிழக மீனவர்களை விடுதலை செய்யக்கோரி தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் 03.01.2014 அன்று சென்னை சுங்கத்துறை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் அறிவித்துள்ளார்.

சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் 27.12.2013 (வெள்ளிக்கிழமை) அன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

முற்றுகையிடும் போராட்டம்:

இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை மீட்பதற்கு மத்திய அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவர்கள் சென்ற 70 படகுகளையும் இலங்கை அரசு பறிமுதல் செய்துள்ளது. உண்ணாவிரதம், கடை அடைப்பு உள்பட பல்வேறு போராட்டங்களை தமிழக மீனவர்கள் நடத்தி வருகின்றனர். ஆனால் போராட்டங்களுக்கு மத்திய அரசு மதிப்பளிக்கவில்லை. எனவே மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் சென்னை கடற்கரை சாலையில் ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள சுங்கத்துறை அலுவலகத்தை 03.01.2014 அன்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்த உள்ளோம்.

நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி:


பா.ம.க. எங்களின் உழைப்பை உறிஞ்சி விட்டது. அதனால் தான் பா.ம.க.வில் இருந்து தொடர்ந்து நிர்வாகிகள் வெளியேறி வருகின்றனர். எங்களை பொறுத்தவரையில் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் மற்றும் பா.ம.க. இல்லாத அணியில் இணைவோம்.திராவிட கட்சிகள் மற்றும் தேசிய கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்ற டாக்டர் ராமதாஸ் இப்போது அந்த கட்சிகளிடம் கூட்டணிக்காக காத்திருக்கிறார். டாக்டர் அன்புமணி ராமதாசை டெல்லிக்கு அனுப்பி தலைவர்களை சந்திக்க செய்கிறார்.

தமிழக பிரதமர்:

பிப்ரவரி 2–ந்தேதி சேலத்தில் எங்கள் கட்சியின் 3–வது ஆண்டு தொடக்க விழா நடக்கிறது. இந்த கூட்டத்தில் கூட்டணி குறித்து முடிவு செய்வோம். தமிழகத்தில் இருந்து யார் பிரதமராக வந்தாலும் எங்களுக்கு சந்தோஷம் தான். ஜெயலலிதா பிரதமராக வந்தால் அதை நாங்கள் வரவேற்போம்.

கொற்றவ மூர்த்தி:




முன்னதாக பாட்டாளி மக்கள் கட்சியின் ஒருங்கிணைந்த தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்ட செயலாளரும், பா.ம.க.வின் மாநில கைவினைப் பொருள்கள் பிரிவு தலைவருமான திரு.கொற்றவ மூர்த்தி அவர்கள் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் அவர்கள் முன்னிலையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் இணைந்தார்.

பேட்டியின்போது மாநில பொது செயலாளர் வை.காவேரி, அமைப்பு செயலாளர் காமராஜ், இணைப் பொது செயலாளர் போரூர் சண்முகம், தொழிற்சங்கத் தலைவர் சைதை சிவா, செந்தில்குமார், துணைப் பொது செயலாளர் ஜெயமோகன், வில்லிவாக்கம் தேவ்ராஜ், அரியலூர் மாவட்ட செயலாளர், வே.சாமிநாதன் சபரிஷ், மாநிஉள்பட பலர் கலந்து கொண்டனர்.


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP