மேச்சேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற தமிழக வாழ்வுரிமைக் கட்சி கோரிக்கை
புதன், 4 டிசம்பர், 2013
சேலம்:
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மேச்சேரி நகர ஆலோசனை கூட்டம் பி.டி.சி திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
ஆலோசனைக் கூட்டத்தில் நகர தலைவர் கோவிந்தன் தலைமை தாங்கினார். நகர செயலாளர் பழனிசாமி வரவேற்புரை ஆற்றினார். மாவட்ட செயலாளார் வீராசாமி, ஒன்றிய அமைப்பாளர்கள் ஜெகநாதன், குமார், மயிலேசன், மாவட்ட இளைஞர் அணி தலைவர் கார்த்திக், நகர துணை தலைவர்கள் துரைப்பாண்டி, பச்சியப்பன், நகர பொருளாளர் கோவிந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கட்சியின மாநில அமைப்பு செயலாளர் மே.பா.காமராஜ் சிறப்புரை ஆற்றினார். மாவட்ட பொருளாளர் ஜமுனா, ஒன்றிய இளைளுர்அணி செயலாளர் மாயாண்டி மற்றும் குமார், மணி ஆகியோர் கலந்துகொண்டனர்.
ஆலோசனைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
1. வரும் பிப்ரவரி மாதம் 2–ந் தேதி சேலத்தில் நடைபெறும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் 3–ம் ஆண்டு பொதுக்கூட்டத்தில் திரளாக கலந்து கொள்வது,
2. மேச்சேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சரிவர நோயாளிகளை கவனிப்பதில்லை, போதிய ஊழியர்களும், உபகரணங்களும் இல்லை இதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்துவது
உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக