கடலூர் மாவட்ட வன்னியர் சங்கக் கட்டடத்தை உயர்நீதிமன்ற உத்தரவின்படி, தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் மனு
ஞாயிறு, 8 டிசம்பர், 2013
கடலூர்
மாவட்ட வன்னியர் சங்கக் கட்டடத்தை உயர்நீதிமன்ற உத்தரவின்படி, தங்களிடம்
ஒப்படைக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் மனு
அளிக்கப்பட்டுள்ளது.
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில நிர்வாக குழுத் தலைவர் தி.திருமால்வளவன் அவர்கள் கடலூர் எஸ்பி ராதிகா, கோட்டாட்சியர் ஷர்மிளா ஆகியோரிடம் சனிக்கிழமை (07.12.2013) அளித்த மனு விவரம்:
கடலூர் மஞ்சக்குப்பம் சாலையில் உள்ள கட்டடத்தை, ராஜராஜேஸ்வரி என்பவரிடமிருந்து பவர் எழுதி வாங்கி, போட்டித் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவசப் பயிற்சி மையத்தை நடத்தி வந்தேன். அந்தக் கட்டத்தின் ஒரு பகுதியை அப்போது பாமக சட்ட மன்றத் உறுப்பினராக இருந்த எனது சகோதரர் வேல்முருகன், தனது அலுவலமாகப் பயன்படுத்தி வந்தார்.
வேல்முருகன் பாமகவில் இருந்து விலக்கப்பட்ட பிறகு, இந்தக் கட்டடத்துக்கு பாமகவினர் உரிமை கொண்டாடியதைத் தொடர்ந்து, பிரச்னை ஏற்பட்டது. அப்போது கட்டடத்தை சீல் வைக்க கோட்டாட்சியர் உத்தரவிட்டார்.
இது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், எங்களிடம் கட்டடத்தை ஒப்படைக்க வேண்டும் எனவும், இந்த பிரச்னைக்கு உரிமையியல் நீதிமன்றம் மூலம் தீர்வு பெற்றுக் கொள்ள வேண்டும் எனவும், அதுவரை கட்டடத்தை நாங்கள் அனுபவித்துக் கொள்ளலாம் எனவும் தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பின் அடிப்படையில், இந்தக் கட்டத்தை எங்களிடம் ஒப்படைக்கவும், பாதுகாப்பு அளிக்கவும் வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக