Blogger இயக்குவது.

தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் அவர்களின் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்

செவ்வாய், 31 டிசம்பர், 2013



அகிலமே கொண்டாடும் ஆங்கில புத்தாண்டு எல்லோருக்கும் வளமான ஆண்டாக அமைய வேண்டும்  என்று வாழ்த்தி தனிமனித முன்னேற்றம் தான் நமது முன்னேற்றம் என்பதை இளைஞர்கள் உணர்ந்து ஈடுபாடு உடனும் கடினமாகவும் உழைக்க வேண்டும் அப்போது தான் நாம் நினைக்கின்ற லட்சியம் நிறைவேறும். தமிழர் நலம் உயர வளம் உயர தரணியிலே திக்கெட்டும் வாழ்கின்ற தமிழர்களின் எண்ணமெல்லாம்  ஈடேற சர்வதேச அரங்கினுள்ள தமிழர்களின் உரிமைக்குரல் ஒலித்திடவும் அதன் விளைவாய் தமிழர்களின் நிலை உயரவும், சிறக்கவும் உலக அமைதியின் மேன்மை நெறியில் அனைவரும் அன்பு நிறைந்து வாழவும், உரிமையும் மேம்பட பிறக்கட்டும் இனிய புத்தாண்டு என்று தொடர்ந்து எமது வளர்ச்சிக்கு ஆதரவு தரும் பத்திரிக்கையாளர்கள், தொண்டர்கள், கட்சி நிர்வாகிகள், பொது மக்கள் அனைவருக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

தி.வேல்முருகன்
நிறுவனத் தலைவர், 
தமிழக வாழ்வுரிமைக் கட்சி

Read more...

2013 ஆம் ஆண்டில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி கடந்து வந்த பாதை

1. இந்தியா டுடே வார இதழால் 2013 வளரும் தலைவர்கள் என்ற கருத்துக் கணிப்பில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் தேர்வு செய்யப்பட்டார்.

 2. கோயம்புத்தூர் குற்றவியல் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் நடத்த்திய 5ஆம் ஆண்டு தைப்பொங்கல் மற்றும் திருவள்ளுவர் தின விழாவில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் அவர்கள் கலந்து கொண்டு " தமிழர் வாழ்வில் விழாக்கள் " என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.  

3. கடலூர் தெற்கு மாவட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சிதம்பரம் தில்லை கோவிந்தராஜா மண்டபத்தில் 12/01/2013 (சனிக்கிழமை) அன்று நடைபெற்றது.

4.  முசிறியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச திருக்குறள் புத்தகம் வழங்கும் விழா நடைபெற்றது.

5. தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் இரண்டாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு சிதம்பரம் அன்பகம் முதியோர் இல்லத்தில் ஆதரவற்ற முதியோர், சர்வராஜன்பேட்டை ஆதரவற்ற பள்ளி மாணவர்கள், குமராட்சி ஆதரவற்ற முதியோர் மற்றும் மாற்று திறனாளி மாணவ, மாணவிகள் ஆகிய 60 பேர் உள்ளிட்ட சாலையோர ஆதரவற்றோர் 200 பேருக்கு கம்பளி போர்வை மற்றும் உதவிகள்  வழங்கப்பட்டது.

6. தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் 2ம் ஆண்டு தொடக்க விழா விழுப்புரத்தில் 25/01/2013 (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது.

7. தழல் ஈகி முத்துக்குமாரின் நான்காம் ஆண்டு நினைவு நாளையொட்டி, சென்னையில் 29.01.2013 அன்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.  

8. இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சவை இந்தியாவுக்குள் அனுமதித்த மத்திய அரசைக் கண்டித்து தமிழக ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம்  தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் தி.வேல்முருகன் தலைமையில் 05/02/2013 அன்று நடைபெற்றது.


9. இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சவை வருகைக் கண்டித்து 08/02/2013 புதுச்சேரியில் ராஜிவ் காந்தி சதுக்கத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின்  புதுவை அமைப்பாளர் புதுவை ஸ்ரீதர் தலைமையில் போராட்டம்  நடைபெற்றது.

10. இலங்கை அதிபர் இராசபக்சேவை பன்னாட்டு நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சேலத்தில்  04.03.2013 அனைத்துக் கட்சிகளின் சார்பில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தமிழக வாழ்வுரிமைக்  கட்சியின் அமைப்பாளர்  வை.காவேரி பங்கேற்றார்.

11. தென்பெண்ணை ஆற்று நீரை உறிஞ்சி 130 ஏரிகளுக்கு நீரை திருப்பிவிடும் கர்நாடக அரசைக் கண்டித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் நிறுவனர் தி.வேல்முருகன் தலைமையில் 25.3.2013 அன்று ஓசூர் பேருந்து நிலையத்தில் இருந்து கர்நாடகா எல்லை நோக்கி முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.

12. பெண்ணாடம் இறையூர் அம்பிகா சர்க்கரை ஆலையில் விவசாயிகளுக்கு தர வேண்டிய நிலுவைத் தொகையினை உடனடியாக விவசாயிகளுக்கு வழங்க கோரி தமிழக வாழ்வுரிமைக்  கட்சி சார்பில் 08.04.2013 ன்று ஆலையை முற்றுகையிடும் போராட்டம் தி.வேல்முருகன் தலைமையில் நடைபெற்றது. ஆலை  நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தைக்கு பின் முதல் தவணையை அப்போதே நிர்வாகம் அளித்தது.

13. தமிழக மீனவர்களை தொடர்ந்து தாக்கிய இலங்கை ராணுவத்தை கண்டித்தும், தனி ஈழம் அமைய எதிர்ப்பு தெரிவிக்கும் ராஜபக்சவை கடுமையாக கண்டித்தும், தமிழ் இனத்தின் தொப்புல் கொடி உறவுகள் அழிவதை கண்டுகொள்ளாத இந்திய அரசைக் கண்டித்தும், கட்சத் தீவை மீட்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் நாகை மாவட்டம் தரங்கம்பாடி பேருந்து நிறுத்தம் அருகே 10.04.2013 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

14. இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனுக்கு சேலத்தில் சிலை எழுப்புவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் பொதுச் செயலாளர் வை.காவேரி, மாநில அமைப்பாளர் ஆகியோர் மாவட்ட ஆட்சியர் க.மகரபூஷணத்திடம் 15.0402013  அன்று மனு அளித்தனர்.

15. கள்ளக்குறிச்சி  மாடூர் டோல்கேட் முறைகேடுகளை கண்டித்தும், அதனை மூட வலியுறுத்தியும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் மாநில துணைப் பொதுச் செயலாளர் சுரேஷ்குமார் தலைமையில் முற்றுகைப் போராட்டம் 22.04.2013  நடைபெற்றது.

16. தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் சென்னை போரூரில் தலைமை அலுவலகத்தில்  30.04.2013 அன்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் தலைமையில் நடைபெற்றது.

17. புதுச்சேரியில் சென்டாக் நிதியில் மோசடி வழக்கை சி.பி.யை விசாரிக்க தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில அமைப்பாளர் புதுவை ஸ்ரீதர் கோரிக்கை விடுத்தார்.

18. கடலூர் மாவட்டம் குமராட்சி அருகே தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் நிவாரண உதவி வழங்கப்பட்டது.

19. சிதம்பரம் அருகே உள்ள குமராட்சியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஒன்றியச் செயலர் கே.ஆர்.ஜி தமிழ் தலைமையில் முள்ளிவாய்க்கால் போரில் மரணமடைந்த தமிழர்களுக்கு மெழுகுவர்த்தி நினைவஞ்சலி   18.05.2013 செலுத்தப்பட்டது.

20. அரசுப்  பள்ளிகளில் தமிழ் வழிக் கல்வியை ஆங்கில வழி கல்வியாக மாற்றிய தமிழக அரசைக் கண்டித்து தமிழ் வழிக் கல்வி கூட்டியக்கம் 28.05.2013  சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக் கல்வி இயக்ககத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்பட்டது. இதில் தமிழக வாழ்வுரிமைக்  கட்சியின் தொழிற் சங்கத் தலைவர் சைதை சிவா பங்கேற்றார்.

21. தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் சீர்காழியில் மத்திய அரசின் தமிழின விரோதப் போக்குகளான ஈழத் தமிழ்மக்களைக் கொல்லத் துணை போனது மட்டுமல்லாமல் தொடர்ந்து சிங்கள இராணுவத்துக்கு பயிற்சி அளிப்பது, மீனவர்கள் தாக்கப்படுவது, காவிரியில் தண்ணீர் தர மறுப்பது, மத்திய தொகுப்பில் இருந்து மின்சாரம் தர மறுப்பது போன்றவற்றைக் கண்டித்து மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் 29.06.2013 அன்று நடைபெற்றது.

22. கல்விக் கடன் வழங்க மறுக்கும் வங்கிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தருமபுரியில்15.06.2013 அன்று நடைபெற்ற தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் ஒருங்கிணைந்த மாவட்ட செயல்வீரர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த கூட்டத்தில் மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் தி.திருமால்வளவன் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார்.

23. தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் மற்றும் அரசுப் பள்ளிகளிலும் தமிழ்வழிக் கல்வியை கட்டாய பாடமாக கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தியும், தமிழ் வழியில் படித்தோருக்கு அரசு வேலையில் 80 % இட ஒதுக்கீடு தரக் கோரியும்  தமிழ் வழிக் கல்வி கூட்டியக்கம் சார்பில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் தி.வேல்முருகன் தலைமையில்  வள்ளுவர் கோட்டத்தில் அனைத்து கட்சிகளும் கலந்து கொண்ட கண்டன ஆர்பாட்டம் 17.06.2013 அன்று நடைபெற்றது.


24. தமிழ்வழிப் பள்ளிகளை ஆங்கிலவழிப் பள்ளிகளாக மாற்றும் தமிழக அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் தமிழ்வழியில் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் 80% ஒதுக்கீடு வழங்கக்கோரியும், தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கம் சார்பில் 17.06.2013 அன்று தஞ்சையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் ம.இரவிச்சந்திரன் பங்கேற்றார். கிருஷ்ணகிரி ரவுண்டானா அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாவட்டச் செயலாளர் வேலுமணி தலைமை வகித்தார்.

 25. நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் ஐந்து சதவீத பங்குகளை மத்திய அரசு விற்பனை செய்வதைக் கண்டித்தும், நீதிமன்ற உத்தரவுபடி 13 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்களைப் பணி நிரந்தரம் செய்யக்கோரியும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் தி.வேல்முருகன் தலைமையில்  நெய்வேலி வட்டம் 19–ல் உள்ள தபால் நிலையம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் 09.07.2013 அன்று நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

26. சேலத்தில் படுகொலை செய்யப்பட்ட பாஜக மாநிலப் பொதுச்செயலாளர் ஆடிட்டர் ரமேஷின் குடும்பத்தினருக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் சேலம் மாவட்ட நிர்வாகிகள் ஆறுதல் கூறினர். தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சி தலைவர்களுக்கும் அரசு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாநில பொதுச்செயலாளர் காவேரி கோரிக்கை விடுத்தார்.

27. தமிழக வாழ்வுரிமைக் கட்சிக்கு இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகாரம் அளித்தது.

28. தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்படுவதைக் கண்டித்தும், 65 தமிழக மீனவர்களைக் கைது செய்து சிறையில் வைத்த இலங்கை அரசைக் கண்டித்தும், கொழும்பு  காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக்கூடாது என வலியுறுத்தியும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் கருப்பு சரவணன் அவர்களின் தலைமையில் 17.08.2013 மயிலாடுதுறை தலைமை அஞ்சல் நிலையத்தை முற்றுகையிட்டு, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

29. தனியாரிடம் உள்ள தூத்துக்குடி டாக் தொழிற்சாலையை அரசே ஏற்று நடத்த வலியுறுத்தியும், இலங்கை ராணுவத்தினரால் பாதிக்கப்பட்டுவரும் தமிழக மீனவர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்காத மத்திய அரசை கண்டித்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் தூத்துக்குடியில் வருமானவரித்துறை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம்  20.08.2013  அன்று நடைபெற்றது. போராட்டத்திற்கு மாநில துணை பொதுச்செயலாளர் மாரிச்செல்வம் தலைமை வகித்தார். முற்றுகைப் போராட்டத்தில் தி.வேல்முருகன் கண்டன உரை ஆற்றினார்.

30. கடலூர், விழுப்புரம் மாவட்டத்தில் தானே புயல் வீடு கட்டும் திட்டத்திற்கு வழங்கும் நிதியை ஓரு லட்சத்து ஐம்பதாயிரமாக உயர்த்தி வழங்க கோரி தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் அவர்கள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு மனு அனுப்பினார்.

31. ஈழத் தமிழர்களின் ஈழ விடுதலையை கொச்சைப்படுத்தி ஈழ விடுதலை போராளிகளை தீவிரவாதிகளாக சித்தரித்து எடுக்கப்பட்ட மெட்ராஸ் கபே திரைப்படத்தை தமிழக அரசு தடை செய்யவும்,  படத்தை வெளியிட்டால்  தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தொண்டர்கள் அதனை தடுத்து நிறுத்துவார்கள் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் எச்சரிக்கை விடுத்தார்.

 32. சென்னை வள்ளூவர் கோட்டத்தில் 24.09.2013 அன்று வெங்காயம் விலை உயர்வை கண்டித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் மாநில துணை பொதுச் செயலாளர் சத்ரியன் து.வெ.வேணுகோபால் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்நடைபெற்றது.

33. இலங்கை காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்குபெற கூடாது என வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் 29.09.2013 அன்று விருத்தாசலத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் கண்டன உரை ஆற்றினார்.

34. தமிழக வாழ்வுரிமைக் கட்சியின்  விருத்தாசலம் நகர கட்சி அலுவலகம் திறப்பு விழா 30.08.2013 அன்று நடந்தது. தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் நகர  அலுவலகத்தை திறந்து வைத்தார்.

35. இலங்கை காமன்வெல்த் மாநாட்டில் இந்திய பிரதமர் பங்கேற்ககூடாது, தமிழர்களை இழிவு படுத்தும் மெட்ராஸ் கபே திரைப்படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாணவர் பாசறை சார்பில் அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல் புல மாணவர்கள் 06.09.2013 வகுப்புகளை புறக்கணித்தனர்.

36. தூத்துக்குடியில் மூடப்பட்ட தூத்துக்குடி டாக் தொழிற்சாலை மீண்டும் திறக்க வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் 20.08.2013 அன்று தூத்துக்குடி வருமானவரித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதை தொடர்ந்து  டாக் தொழிற்சாலை மீண்டும் திறக்கப்பட்டது. இதன் மூலம் டாக் தொழிற்சாலையில் பணிபுரிந்த 3000 மேற்பட்ட தொழிலாளர்களுக்கு மீண்டும் வேலை கிடைத்தது.

37. கூடங்குளம் அணு உலையை மூடக் கோரி அணுசக்திக்கு எதிரான மக்கள் கூட்டமைப்பின் சார்பில்  02.10.2013 அன்று சென்னை வள்ளுவர் கோட்டம், கடலூர், புதுவை, விழுப்புரம், ஓசூர் மற்றும் தமிழகமெங்கும் மாவட்ட தலை நகரங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

38. இலங்கை காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ள கூடாது என வலியுறுத்தி  சென்னை வள்ளுவர் கோட்டத்தில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் இருந்த தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச் செயலாளர் திரு.தியாகுவுக்கு ஆதரவாக தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் மற்றும் கட்சித் தொண்டர்கள் 04.10.2013 அன்று ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்று ஆதரவளித்தனர்.

39. இலங்கை காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி 6.10.2013 அன்று கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

40. இலங்கை காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது என்பது உள்பட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே 50 ஆயிரம் பேர் பங்கேற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் 15.10.2013 அன்று நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் நிறுவனத் தலைவர் தி.வேல்முருகன் தலைமை தாங்கி கண்டன உரை ஆற்றினார்.

41. இலங்கை காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாணவர் அணி சார்பில் கடலூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு  (28.10.2013) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

42. இலங்கை காமன்வெல்த் மாநாட்டில்  இந்தியா பங்கேற்பதற்கு   எதிர்ப்பு தெரிவித்து 12.11.2013 அன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மகளிர் அணி சார்பில் ஒப்பாரி போராட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் நிறுவனத் தலைவர் தி.வேல்முருகன் கண்டன உரை ஆற்றினார்.மேலும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் சிதம்பரம், புதுவை, கிருஷ்ணகிரி, சேலம், ஓசூர், கடலூர், விழுப்புரம், தஞ்சை, நாகை உட்பட தமிழகம் முழுவது நடைபெற்ற கடை அடைப்பு மற்றும் ரயில் மறியல் போராட்டதில் 15,000 மேற்பட்ட தொண்டர்கள் கைதாகினர்.

43.  முள்ளிவாய்க்கால் முற்றத்தின் சுற்றுச்சுவர் மற்றும் பூங்காவை 13.11.2013 அன்று இடிக்கபட்டதற்கும், உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் பழ. நெடுமாறன் அவர்களை காவல்துறையினர் கைது செய்ததற்கும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் கண்டனம் தெரிவித்தார்.

44. நெய்வேலி மந்தாரகுப்பத்தில் நெடுஞ்சாலை துறையினர் சாலை விரிவாக்கத்தில் இடத்தை இழந்த சிறு, குறு வியாபாரிகளுக்கு மாற்று இடம் தர தமிழக வாழ்வுரிமைக் கட்சி  நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் கோரிக்கை விடுத்துள்ளார்.

45.  தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் 59 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு 26.11.2013 அன்று ஈழ மக்களுக்காக தொடர்ந்து போராடி வரும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் அவர்கள் தேசிய தலைவரின் சிந்தனை துளி பொறிக்கபட்ட பொன்னாடை போர்த்திக் கவுரவிக்கப்பட்டார். சிதம்பரத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாணவரணி சார்பில் வேங்கான்தெருவில் இலங்கை தமிழ் போராளிகளுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி வீரவணக்கம் கொண்டாடப்பட்டது.

46. புதுச்சேரி மாநிலத்தில் காட்டேரிக்குப்பம், சுத்துகேணி சாலை அருகே பொதுமக்களுக்கும், சுற்றுசூழலுக்கும் இடையூறாய் அரசுத்துறை சார்ந்த மதுபானக்கடையினை திறக்க வேண்டாம் என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில அமைப்பாளர் புதுவை ஸ்ரீதர் அவர்கள் 03.12.2013 அன்று புதுவை மாநில முதல்வர் திரு.என்.ரங்கசாமி அவர்களை நேரில் சந்தித்து மனு அளித்தார்.

47. தமிழகத்தில் கால்நடைகளுக்கு வேகமாக பரவிய கோமாரி நோயை கட்டுப்படுத்த விரைந்து நடவடிக்கை எடுக்கக்கோரியும் கோமாரி நோய் தாக்கி இறந்த கால்நடைகளுக்கு உரிய நிவாரணம் வழங்கக்  கோரியும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் 14.12.2013 அன்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனத் தலைவர் தி.வேல்முருகன் அவர்களின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோமாரி நோய் தாக்கி இறந்த மாடுகளுக்கு நிவாரணமாக அதிகபட்சம் 20,000.00 ரூபாயும், குறைந்தபட்சம் 10,000.00 ரூபாயும், கோமாரி நோய் தாக்கி இறந்த ஆடுகளுக்கு நிவாரணமாக அதிகபட்சம் 10,000.00 ரூபாயும், குறைந்தபட்சம் 5,000.00 ரூபாயும் தமிழக அரசு வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டது.

48. தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் சென்னை போரூர் கட்சி அலுவலகத்தில் 14.12.2013 அன்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் தலைமையில் நடைபெற்றது.

49. ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே வன அதிகாரி கொலையில் அப்பாவி தமிழர்களைக் கைது செய்வதை கைவிட வேண்டும் என ஆந்திர காவல்துறைக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன்  17.12.2013 அன்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 
50. பண்ருட்டி நகராட்சியில் 12 வார்டுகளில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி கொடியேற்று விழா 23.12.2013 அன்று நடைபெற்றது. கொடியேற்று விழாவில் பொறியாளர் தி.கண்ணன் பங்கேற்றார்.

Read more...

பாட்டாளி மக்கள் கட்சியின் சேலம் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் ஓமலூர் செந்தில் அவர்கள் தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் இணைந்தார்

பாட்டாளி மக்கள் கட்சியின் சேலம் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் ஓமலூர் செந்தில் அவர்கள் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் அவர்கள் முன்னிலையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் இணைந்தார்.
 



Read more...

சேலம் மாநகர் மாவட்ட பொதுக் குழுக் கூட்டம் 29.12.2013 அன்று நடைபெற்றது

திங்கள், 30 டிசம்பர், 2013

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சேலம் மாநகர் மாவட்ட பொதுக் குழுக் கூட்டம் 29.12.2013 (ஞாயிற்றுக்கிழமை) அன்று காலை 10.00 மணி அளவில் சேலம் மாவட்ட தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது..
 


















 

Read more...

இலங்கை சிறையில் உள்ள 210 தமிழக மீனவர்களை விடுதலை செய்யக்கோரி தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் 03.01.2014 அன்று சென்னை சுங்கத்துறை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம்

சனி, 28 டிசம்பர், 2013

இலங்கை சிறையில் உள்ள 210 தமிழக மீனவர்களை விடுதலை செய்யக்கோரி தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் 03.01.2014 அன்று சென்னை சுங்கத்துறை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் அறிவித்துள்ளார்.

சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் 27.12.2013 (வெள்ளிக்கிழமை) அன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

முற்றுகையிடும் போராட்டம்:

இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை மீட்பதற்கு மத்திய அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவர்கள் சென்ற 70 படகுகளையும் இலங்கை அரசு பறிமுதல் செய்துள்ளது. உண்ணாவிரதம், கடை அடைப்பு உள்பட பல்வேறு போராட்டங்களை தமிழக மீனவர்கள் நடத்தி வருகின்றனர். ஆனால் போராட்டங்களுக்கு மத்திய அரசு மதிப்பளிக்கவில்லை. எனவே மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் சென்னை கடற்கரை சாலையில் ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள சுங்கத்துறை அலுவலகத்தை 03.01.2014 அன்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்த உள்ளோம்.

நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி:


பா.ம.க. எங்களின் உழைப்பை உறிஞ்சி விட்டது. அதனால் தான் பா.ம.க.வில் இருந்து தொடர்ந்து நிர்வாகிகள் வெளியேறி வருகின்றனர். எங்களை பொறுத்தவரையில் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் மற்றும் பா.ம.க. இல்லாத அணியில் இணைவோம்.திராவிட கட்சிகள் மற்றும் தேசிய கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்ற டாக்டர் ராமதாஸ் இப்போது அந்த கட்சிகளிடம் கூட்டணிக்காக காத்திருக்கிறார். டாக்டர் அன்புமணி ராமதாசை டெல்லிக்கு அனுப்பி தலைவர்களை சந்திக்க செய்கிறார்.

தமிழக பிரதமர்:

பிப்ரவரி 2–ந்தேதி சேலத்தில் எங்கள் கட்சியின் 3–வது ஆண்டு தொடக்க விழா நடக்கிறது. இந்த கூட்டத்தில் கூட்டணி குறித்து முடிவு செய்வோம். தமிழகத்தில் இருந்து யார் பிரதமராக வந்தாலும் எங்களுக்கு சந்தோஷம் தான். ஜெயலலிதா பிரதமராக வந்தால் அதை நாங்கள் வரவேற்போம்.

கொற்றவ மூர்த்தி:




முன்னதாக பாட்டாளி மக்கள் கட்சியின் ஒருங்கிணைந்த தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்ட செயலாளரும், பா.ம.க.வின் மாநில கைவினைப் பொருள்கள் பிரிவு தலைவருமான திரு.கொற்றவ மூர்த்தி அவர்கள் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் அவர்கள் முன்னிலையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் இணைந்தார்.

பேட்டியின்போது மாநில பொது செயலாளர் வை.காவேரி, அமைப்பு செயலாளர் காமராஜ், இணைப் பொது செயலாளர் போரூர் சண்முகம், தொழிற்சங்கத் தலைவர் சைதை சிவா, செந்தில்குமார், துணைப் பொது செயலாளர் ஜெயமோகன், வில்லிவாக்கம் தேவ்ராஜ், அரியலூர் மாவட்ட செயலாளர், வே.சாமிநாதன் சபரிஷ், மாநிஉள்பட பலர் கலந்து கொண்டனர்.


Read more...

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தஞ்சை நாடாளுமன்ற தொகுதி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் 04.01.2014 அன்று தஞ்சையில் நடைபெறும்

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தஞ்சை நாடாளுமன்ற தொகுதி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ஜனவரி 4ம் தேதி தஞ்சையில் நடைபெற உள்ளது.

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தஞ்சை மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் தஞ்சையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் துரை.கார்த்திகேயன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் அண்ணா.வினோத், பொருளாளர் ரவீந்திரநாயுடு, துணை செயலாளர் சேது அண்ணாமலை, மாநில இளைஞரணி துணை செயலாளர் முகமது ஆரிப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தெற்கு மாவட்ட செயலாளர் அப்பாக்கண்ணு வரவேற்றார். மாநில துணை பொதுச் செயலாளர் தஞ்சை தமிழ்நேசன் சிறப்புரையாற்றினார். மாவட்ட இளைஞரணி செயலாளர் பாபு, மத்திய மாவட்ட அமைப்பாளர் மோகன், மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் ஜோதிவேல், மாவட்ட பொறியாளர் அணி செயலாளர் சதீஷ்குமார், திருவையாறு ஒன்றிய செயலாளர் சுயம்பு. கஜேந்திரன், நகர இளைஞரணி தலைவர் செந்தில், துணை செயலாளர் முத்தமிழ்ச்செல்வன், ஒன்றிய மாணவரணி செயலாளர் விக்னேஸ்வரன், மாவட்ட இளைஞரணி பொருளா
ர் கோகுல்நாத் உள்பட பலர் கலந்து கொண்டனர். நகர செயலாளர் முகமதுஎகியா நன்றி கூறினார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:


1. தஞ்சை நாடாளுமன்ற தொகுதி தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தை வரும் 4ம் தேதி தஞ்சையில் நடத்துவது,

2. இக்கூட்டத்தில் கலந்து கொள்ள வருகைத்தரும் கட்சியின் நிறுவன தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகனுக்கு சிறப்பான வரவேற்பு கொடுப்பது,

3. தஞ்சை, திருவையாறு, ஒரத்தநாடு, பேராவூரணி, பட்டுக்கோட்டை, மன்னார்குடி தொகுதிக்கு உட்பட்ட நிர்வாகிகள் திரளாக கலந்து கொள்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

4. பிப்ரவரி 2–ந் தேதி சேலம் மாவட்டத்தில் நடைபெற உள்ள தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் 3–ம் ஆண்டு தொடக்க விழாவுக்கு தஞ்சை மாவட்ட சார்பில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திரளாக பங்கேற்பது

உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Read more...

கடலூர் நாடாளுமன்றத் தொகுதியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் போட்டியிட வேண்டும் - கடலூர் மாவட்ட மாணவரணி செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்

வெள்ளி, 27 டிசம்பர், 2013

கடலூர் :

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாவட்ட மாணவரணி செயற்குழு கூட்டம் கடலூரில் 26.12.2013 அன்று நடைபெற்றது.

செயற்குழு கூட்டத்திற்கு மாநில மாணவரணி துணை செயலாளர் அருள்பாபு தலைமை தாங்கினார். கிழக்கு மாணவரணி மாவட்ட செயலாளர் முத்துகுமார் முன்னிலை வகித்தார். மேற்கு மாணவரணி மாவட்ட செயலாளர் நவீன் அனைவரையும் வரவேற்றார். நிர்வாகிகள் வில்லியம்ஸ், ராம்பிரகாஷ், சத்தியஞானம், ஆனந்த், பிரபு, கார்த்திக், அன்பு விநாயகம், ராஜசேகர், ஜான்பால், மோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். நகர மாணவரணி தலைவர் சங்கர், செயலாளர் சுரேஷ் நன்றி கூறினார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

1. வருகிற நாடாளுமன்ற தேர்தலில் கடலூர் நாடாளுமன்றத் தொகுதியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் போட்டியிட வேண்டும்.

2. கடலூர்–விருத்தாசலம் இடையே ரெயில்வே மேம்பாலம் விரைவாக மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.

3. இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட 210 தமிழக மீனவர்களை மத்திய அரசு தலையிட்டு விடுதலை செய்ய வேண்டும். மேலும் அவர்களுடைய படகுகள், உடமைகளையும் மீட்டெடுக்க வேண்டும்.

4. பிப்ரவரி 2–ந் தேதி சேலம் மாவட்டத்தில் நடைபெற உள்ள தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் 3–ம் ஆண்டு தொடக்க விழாவுக்கு மாணவரணி சார்பாக கடலூரில் இருந்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பது

உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.



Read more...

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சேலம் மாநகர் மாவட்ட பொதுக் குழுக் கூட்டம் 29.12.2013 அன்று நடைபெறும்

புதன், 25 டிசம்பர், 2013

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சேலம் மாநகர் மாவட்ட பொதுக் குழுக் கூட்டம் 29.12.2013 (ஞாயிற்றுக்கிழமை) அன்று காலை 10.00 மணி அளவில் சேலம் மாவட்ட தலைமை அலுவலகத்தில் நடைபெறும். இதில் சேலம் மாநகர பொறுப்பாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு கேட்டுகொள்கிறோம்.

தொடர்புக்கு: 9789222204, 9944072990

Read more...

பண்ருட்டி நகராட்சியில் 12 வார்டுகளில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி கொடியேற்று விழா

செவ்வாய், 24 டிசம்பர், 2013

கடலூர் மாவட்டம் பண்ருட்டி நகராட்சியில் 12 வார்டுகளில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி கொடியேற்று விழா 23.12.2013 அன்று நடைபெற்றது. கொடியேற்று விழாவில் பொறியாளர் தி.கண்ணன், மாவட்ட செயலாளர் பஞ்சமூர்த்தி, தமிழர் படை ஜோதிலிங்கம், மாநிலத் துணைத் தலைவர் தலித் சக்திவேல், பண்ருட்டி நகர செயலாளார் ராஜமூர்த்தி, இளைஞசரணி துணைத் தலைவர் விஜயராகவன், நகரப் பொருளாளர் ராஜேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.  தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனத் தலைவர்  தி.வேல்முருகன் முன்னிலையில் பல்வேறு கட்சிகளில் இருந்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் இணைந்தனர்.




































Read more...

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP