காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் சிதம்பரத்தில் ரயில் மறியல் போராட்டம்
செவ்வாய், 12 நவம்பர், 2013
இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில்
இந்தியா வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் கலந்து கொள்வதைக்
கண்டித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் சிதம்பரத்தில் இன்று
செவ்வாய்கிழமை (12.11.2013) ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் மாவட்டச் செயலாளர் மு.முடிவண்ணன் தலைமையில் ஊர்வலமாக ரயில்நிலையத்திற்கு சென்று திருச்சி - சென்னை சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட மூத்தநகரமன்ற உறுப்பினர் ஆ.ரமேஷ், ஒன்றியச் செயலாளர் கே.ஆர்.ஜி.தமிழ் உள்ளிட்ட 254 பேரை போலீஸார் கைது செய்தனர். இ்ப்போராட்டத்தில் தமிழத் தேசப் பொதுவுடைமை கட்சி, மக்கள் உரிமை கூட்டமைப்பு, தமிழக உழவர் முன்னணி, மாணவர் முன்னணி, ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம், புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சி உள்ளிட்டவை பங்கேற்றன.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக