Blogger இயக்குவது.

கடலூர் மாவட்டத்தில் கால்நடைகளிடம் வேகமாகப் பரவி வரும் கோமாரி நோயை தடுத்து நிறுத்த தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள தமிழக வாழ்வுரிமைக் கட்சி கோரிக்கை

சனி, 16 நவம்பர், 2013

கடலூர் மாவட்டத்தில் கால்நடைகளிடம் வேகமாகப் பரவி வரும் கோமாரி நோயை தடுத்து நிறுத்த தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் வை.காவேரி வெள்ளிக்கிழமை  (15.11.2013) வலியுறுத்தினார்.

இதுகுறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் வை.காவேரி காட்டுமன்னார்கோயிலில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: 

கடலூர் மாவட்டம் வீராணம் ஏரியிலிருந்து திறக்கப்படும் பாசன வாய்க்கால்கள் தூர்வாரப் படாததால் விளைநிலங்களுக்கு சரிவர சென்றடைவதில்லை. இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே பாசன வாய்க்கால்களை தூர்வார அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்ற மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித்தைக் கண்டிக்கிறோம். இன உணர்வுக்காகப் போராடியதற்காக கைது செய்யப்பட்ட பழ.நெடுமாறனை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
 
பேட்டியின் போது துணைப் பொதுச் செயலாளர் உ.கண்ணன், மாநிலப் பொறுப்பாளர்கள் பாலகுருசாமி, ராஜேந்திரன், மாவட்டச் செயலாளர் முடிவண்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP