விளை நிலங்களில் கெயில் நிறுவனம் எரிவாயு குழாய் பதிக்க அனுமதி: விவசாயிகள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய சட்டரீதியான உதவிகளை தமிழக வாழ்வுரிமைக் கட்சி மேற்கொள்ளும் - வை.காவேரி அறிவிப்பு
புதன், 27 நவம்பர், 2013
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர் வை.காவேரி செவ்வாய்க்கிழமை (26.11.2013) அன்று சேலத்தில் அளித்த பேட்டி:
சீனாவில் கடந்த வாரம் எண்ணெய் குழாய் வெடித்ததில் பெருமளவில் பாதிப்பு ஏற்பட்டது. அதேபோல தமிழகத்தில் சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி உள்ளிட்ட ஆறு மாவட்டங்களின் விளை நிலங்கள் வழியாக கெயில் நிறுவனம் அமைக்கும் எரிவாயு குழாய்கள் வெடித்தால் அதன் பாதிப்பு 5 கி.மீ. தொலைவுக்கு இருக்கும் எனக் கூறப்படுகிறது.
உயர் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு கெயில் நிறுவனம் விளை நிலங்களில் எரிவாயு குழாய்களை பதிக்க முடியாது. ஏனெனில், விவசாயிகளை சமாதானம் செய்து எரிவாயு குழாய் பதிக்க தமிழக அரசு ஒத்துழைக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. இதன்படி, பல கூட்டங்கள் நடத்தி விவசாயிகளை சமாதானம் செய்திட பல ஆண்டுகளாகக் கூடும். தவிர, பாதிக்கப்படும் விவசாயிகளும் தனித்தனியாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவும் வாய்ப்புள்ளது என்பதால் அதுவரை கெயில் நிறுவனம் எரிவாயு குழாய்களை பதிக்க முடியாது. இதன்படி, விவசாயிகள் மேல்முறையீடு செய்ய சட்டரீதியான உதவிகளை தமிழக வாழ்வுரிமைக் கட்சி மேற்கொள்ளும்.
தற்போது நீதிமன்றங்களில் நடக்கும் விவாதங்களை யாரும் தெரிந்து கொள்ள முடிவதில்லை. இதை வழக்குடன் சம்பந்தப்பட்டவர்கள் தெரிந்து கொள்ள வாய்ப்பாக நீதிமன்றங்களில் கண்காணிப்பு கேமராக்கள் வைக்க வேண்டும். தவிர, மகளிருக்கென தனி நீதிமன்றம் உள்ளதுபோல விவசாயிகளுக்காகவும் தனி நீதிமன்றம் அமைக்க வேண்டும். அப்போதுதான் விவசாயிகளின் பிரச்னைகளை விரைவில் தீர்க்க முடியும் என்றார் அவர்.
பேட்டியின்போது மாநிலச் செயற்குழு உறுப்பினர் கே.ஜெயமோகன், மாநகர் மாவட்டச் செயலாளர் எஸ்.வெங்கடேஷ், மாவட்டத் தலைவர் கே.பாலு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

லேபிள்கள்:
எரிவாயு குழாய்கள்,
கெயில் நிறுவனம்,
பேட்டிகள்,
வை.காவேரி
0 கருத்துகள்:
கருத்துரையிடுக