Blogger இயக்குவது.

10 ஆண்டுகள் சிறையில் கழித்த ஆயுள் தண்டனை சிறைவாசிகள் அனைவரையும் விடுவிக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் கோரிக்கை

புதன், 19 பிப்ரவரி, 2014

10 ஆண்டுகள் சிறையில் கழித்த ஆயுள் தண்டனை சிறைவாசிகள் அனைவரையும் விடுவிக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கை:

இந்திய நீதித்துறை வரலாற்றில், மரண தண்டனை தொடர்பான விஷயத்தில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தக் கூடிய தீர்ப்பு ஒன்றை உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது. வீரப்பனின் கூட்டாளிகள் நால்வர் உட்பட 15 பேருடைய தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து கடந்த வாரம் உச்சநீதிமன்றம் ஒரு தீர்ப்பை அளித்தது.

மரண தண்டனை குறித்த பார்வையிலும், மரண தண்டனை நிறைவேற்றம் தொடர்பான நடைமுறையிலும் பல மாற்றங்களை இத்தீர்ப்பு கொண்டு வந்துள்ளது. வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி பி.சதாசிவம், நீதிபதிகள் ரஞ்சன் கோகாய் மற்றும் ஷிவகீர்த்தி சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு, முக்கியத்துவம் வாய்ந்த இத்தீர்ப்பைவழங்கியது.

கருணை மனு மீது முடிவெடுப்பதில் தாமதம் ஏற்பட்டால் அதுவே, மரண தண்டனையைக் குறைப்பதற்குப் போதுமானது என்ற தீர்ப்பில் நீதிபதிகள் கூறியுள்ளனர். மரண தண்டனை விதிக்கப்பட்டு, பல ஆண்டுகளாக சிறையில் வாடிக்கொண்டிருக்கும் பலருக்கும் இத்தீர்ப்பு நம்பிக்கை வெளிச்சத்தைப் பாய்ச்சியுள்ளது.

குறிப்பாக, முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கடந்த 22 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் மரண தண்டனை குறைக்கப்பட்டு ஆயுள் தண்டனையாக ஆக்கப்பட்ட போதிலும் அவர்கள் தொடர்ந்து சிறையில் இருப்பது மிகப் பெரும் அவலமாகும்.

மாநில அரசு முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் வழங்கப்பட்ட தண்டனையை ஆய்வு செய்து இவர்களை விடுதலை செய்ய முடிவு செய்தால் அவ்வாறு விடுதலை செய்து கொள்ளலாம் என்று இத்தீர்ப்பு கூறுகிறது. இதன்படி தமிழக முதல் அமைச்சர், ஆய்வுசெய்து மரண தண்டனை வாழ்நாள் தண்டனையாக மாற்றப்பட்டுள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவரையும் ஏற்கனவே வாழ்நாள் தண்டனை சிறையிலுள்ள நளினி, இராபட்பயாஸ், செயக்குமார், அருப்பக்கோட்டை இரவிச்சந்திரன் ஆகிய நால்வரையும் ஆக மொத்தம் ஏழு பேரையும் உடனடியாக விடுதலை செய்ய செய்து கடந்த 10 ஆண்டுகள் சிறையில் கழித்த ஆயுள் தண்டனை சிறைவாசிகள் அனைவரையும் விடுவிப்பதற்கு தமிழக அரசு முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP