சேலத்தில் நடைபெறும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில மாநாட்டில் கடலூர் மாவட்டத்தின் சார்பில் பெரும் திரளாக கலந்து கொள்ள முடிவு
ஞாயிறு, 9 பிப்ரவரி, 2014
கம்மாபுரம்:
வருகிற 23-ந்தேதி சேலத்தில் நடைபெறும் மாநாட்டில் கடலூர் மாவட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் பெரும் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்று கட்சி செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
செயற்குழுக் கூட்டம்
கம்மாபுரம் ஒன்றிய தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் ஒன்றிய நிர்வாகிகள் செயற்குழு கூட்டம் ஊ.மங்கலம் எலுமிச்சை கிராமத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு ஒன்றிய செயலாளர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆறுமுகம், மாவட்ட பொறுப்பாளர்கள் ரவிச்சந்திரன், சிவலோகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிளை செயலாளர் சண்முகம் வரவேற்று பேசினார்.
கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மாநில நிர்வாகக்குழு தலைவர் தி.திருமால்வளவன் கலந்து கொண்டு பேசினார். இதில், வருகிற பாராளுமன்ற தேர்தலில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைமை எடுக்கும் முடிவுக்கு தொண்டர்கள் ஆதரவு தெரிவித்து கடலூர், சிதம்பரம் தொகுதியில் நிறுத்தப்படும் வேட்பாளரை வெற்றி பெறச்செய்யவது, வருகிற 23-ந் தேதி சேலத்தில் நடைபெறும் மாநாட்டில் 100-க்கும் மேற்பட்ட வாகனங்களில் தொண்டர்கள் பெரும் திரளாக கலந்து கொள்ள வேண்டும்.
தனி வாரியம்
சாலை விபத்துக்கள் அதிகமாக நடப்பதை தடுக்கும் வகையில் அரசே ஓட்டுநர்களுக்கு பயிற்சியளித்து சான்றிதழ் வழங்க வேண்டும். ஓட்டுநர்களின் வாழ்வுரிமையை மேம்படுத்த தனி வாரியம் அமைக்கவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் மாநில தழிழர் படை தளபதிகள் அறிவழகன், முருகன், மாநில செயற்குழு உறுப்பினர் பாலசுப்ரமணியன், வாழைச்செல்வம், கெங்கைகொண்டான் பேரூர் தலைவர் ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், ஊராட்சி செயலர் வினோத்குமார் நன்றி கூறினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக