Blogger இயக்குவது.

என்.எல்.சி.யில் ஒப்பந்த தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி தொழிற்சங்க கூட்டத்தில் தீர்மானம்

ஞாயிறு, 16 பிப்ரவரி, 2014

நெய்வேலி:

என்.எல்.சி.யில் ஒப்பந்த தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி தொழிற்சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆலோசனை கூட்டம்

நெய்வேலி இந்திராநகரில் என்.எல்.சி. தமிழக வாழ்வுரிமை நிரந்தர தொழிலாளர்கள் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் சங்க நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதற்கு சங்க ஒருங்கிணைப்பாளர் திருபுவனசக்கரவர்த்தி தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் சிகாமணி, அமைப்பு செயலாளர் ராமசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிரந்தர தொழிலாளர் சங்க தலைவர் வேல்முருகன் வரவேற்றார்.

தலைமை நிலைய செயலாளர் கண்ணன், தமிழக வாழ்வுரிமை கட்சி மாவட்ட செயலாளர் பஞ்சமூர்த்தி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேசினார்கள்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட தீர்மானங்கள்:

1. என்.எல்.சி. தொழிலாளர்களின் ஊதிய மாற்று ஒப்பந்தத்தை நிர்வாகம் உடனடியாக முடிக்க வேண்டும். 

2. உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி என்.எல்.சி. ஒப்பந்த மற்றும் இன்கோசர்வ் ஒப்பந்த தொழிலாளர்கள் அனைவரையும் உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

3. சம வேலைக்கு சம ஊதியம் வழங்குதல், 

4. வருகின்ற 23–ந் தேதி சேலத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் 3–ம் ஆண்டு தொடக்க விழா மாநாட்டிற்கு என்.எல்.சி. தொழிலாளர் வாழ்வுரிமை சங்கத்தின் சார்பில் பெருந்திரளாக கலந்து கொள்வது என்பது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் அலுவலக செயலாளர்கள் முருகன், ராஜகோபால், சந்துரு, ஒப்பந்த தொழிலாளர் வாழ்வுரிமை சங்க தலைவர் அய்யப்பன், பொதுச்செயலாளர் திருநாவுக்கரசு, அமைப்பு செயலாளர் விஜயன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஞானவேல் நன்றி கூறினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP