கடலூர் மாவட்டம் அண்ணாகிராமம் (கிழக்கு) ஒன்றியத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி கொடியேற்று விழா
திங்கள், 10 பிப்ரவரி, 2014
கடலூர் மாவட்டம் பண்ருட்டி (வடக்கு) அண்ணாகிராமம் (கிழக்கு) ஒன்றியத்தில் வடக்கு
சாத்திப்பட்டு கிராமத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கொடியேற்று விழா
நேற்று 09.02.2014 (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. கொடியேற்று விழாவில் தமிழக வாழ்வுரிமைக்
கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் அவர்கள் பங்கேற்று
கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். விழாவில் மாநில துணைத் தலைவர் சக்திவேல், தமிழர் படை ஜோதிலிங்கம், மாவட்டச் செயலாளர் பஞ்சமூர்த்தி, நகரச் செயலாளர் ராஜமூர்த்தி, ஒன்றியச் செயலாளர் சுரேஷ்
உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் அவர்கள் ஆற்றிய சிறப்புரை :
தமிழக வாழ்வுரிமைக் கட்சி இளைஞர்களுக்காக தொடங்கப்பட்டது. இளைஞர்கள் நலன் மற்றும் உரிமைகளுக்காக நாங்கள் தொடர்ந்து பாடுபடுவோம். இன்றைக்கு தமிழகத்தில் இளைஞர்கள் அதிக அளவில் உறுப்பினராக கொண்ட கட்சியாக தமிழக வாழ்வுரிமைக் கட்சி திகழ்கிறது. வரும் பாராளுமன்ற தேர்தலில் மக்கள் விரும்பும் கூட்டணியில் இடம்பெறுவோம். தமிழர் நலனில் அதிக அக்கறை உள்ளவர்களுடன்தான் கூட்டணி சேரவேண்டும் என்பதற்காக ரொம்பவும் யோசித்து கொண்டிருக்கிறோம். விரைவில் கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்படும். தமிழக மக்கள் தொடர்ந்து தமிழக வாழ்வுரிமைக் கட்சிக்கு ஆதரவு வழங்கி வரும் தேர்தல்களில் வெற்றி வாய்ப்பை வழங்க வேண்டும்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக