கடலூர் மாவட்டம் கம்மாபுரம் கிழக்கு ஒன்றியம், கெங்கைகொண்டான் பேரூர் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் செயற்குழு கூட்டம்
திங்கள், 10 பிப்ரவரி, 2014
கடலூர்
மாவட்டம் கம்மாபுரம் கிழக்கு ஒன்றியம், கெங்கைகொண்டான் பேரூர் தமிழக
வாழ்வுரிமைக் கட்சியின் செயற்குழு கூட்டம் எலுமிச்சை கிராமத்தில் நடந்தது.
ஒன்றிய செயலாளர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். மாநில நிர்வாகக் குழுத் தலைவர் தி.திருமாவளவன், மாநில தமிழர் படை தளபதிகள் அறிவழகன், முருகன், மாவட்ட செயலாளர்கள் ஆறுமுகம், ரவிச்சந்திரன், சிவலோகநாதன் முன்னிலை வகித்தனர். கிளை செயலாளர் சண்முகம் வரவேற்றார். கெங்கைகொண்டான் பேரூர் தலைவர் ராஜேந்திரன், மாநில செயற்குழு உறுப்பினர் பாலசுப்ரமணியன் பங்கேற்றனர். இறுதியாக ஊராட்சி செயலாளர் வினோத்குமார் நன்றி கூறினார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட தீர்மானங்கள்:
1. சேலத்தில் 23.02.2014 அன்று நடைபெற உள்ள தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மூன்றாமாண்டு தொடக்க விழா மாநாட்டிற்கு 100க்கும் மேற்பட்ட வாகனங்களில் பங்கேற்பது..
2. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் சிதம்பரம், கடலூர் தொகுதிகளில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளரை வெற்றி பெறச் செய்வது.
3. குண்டும் குழியுமாகியுள்ள விருத்தாசலம் - வடலூர் சாலையை சீரமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக