தமிழக அரசு நிர்ணயித்த தொகையை முழுமையாக வழங்காமல் ரூ.500 கோடி பாக்கி வைத்திருக்கும் தனியார் சர்க்கரை ஆலைகள் முன்பு 23.12.2014 அன்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் நடக்க இருந்த முற்றுகைப் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு
திங்கள், 22 டிசம்பர், 2014
தனியார்
சர்க்கரை ஆலைகள் முன்பு நாளை டிச.23-ல் நடைபெற இருந்த முற்றுகைப்
போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு! போராட்ட தேதி பின்னர்
அறிவிக்கப்படும்!!
தமிழக அரசு நிர்ணயித்த தொகையை விவசாயிகளுக்கு முழுமையாக வழங்காமல் ரூ500 கோடி அளவுக்கு பாக்கி வைத்திருக்கும் தனியார் சர்க்கரை ஆலைகள் முன்பு டிசம்பர் 23-ந் தேதி செவ்வாய்க்கிழமையன்று முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் பண்ருட்டி தி. வேல்முருகன் அவர்கள் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் பண்ருட்டி தி. வேல்முருகன் அவர்களின் தந்தையார் திரு தங்க. திருநாவுக்கரசு அவர்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு இயற்கை எய்தினார்.
இதனால் நாளை செவ்வாய்க்கிழமையன்று 'தனியார் சர்க்கரை ஆலைகள் முன்பு" நடைபெற இருந்த "முற்றுகைப் போராட்டம்" தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுகிறது.
இந்த முற்றுகைப் போராட்டத்துக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் பண்ருட்டி தி. வேல்முருகன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
- தமிழக வாழ்வுரிமைக் கட்சி
தலைமை நிலையம்,
சென்னை.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக