Blogger இயக்குவது.

விகடன் குழும தலைவர் எஸ்.பாலசுப்பிரமணியன் மறைவுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி தி. வேல்முருகன் இரங்கல்

சனி, 20 டிசம்பர், 2014

விகடன் குழும தலைவர் எஸ்.பாலசுப்பிரமணியன் மறைவுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி தி. வேல்முருகன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி தி. வேல்முருகன் வெளியிட்டுள்ள
இரங்கல் செய்தி:
 
விகடன் குழுமங்களின் தலைவர் எஸ்.பாலசுப்பிரமணியன் தமது 79 வயது சென்னையில் காலமானார் என்ற செய்தி துயரமளிக்கிறது.

தமது இளம் வயதில் பத்திரிகைதுறையில் நுழைந்தவர் பெரியவர் எஸ்.பாலசுப்பிரமணியன். தமிழ் இலக்கிய உலகில் புதிய முயற்சியாக ஆனந்த விகடனில் முத்திரை கதைகள் திட்டத்தை உருவாக்கியவர்.

தந்தை எஸ்.எஸ். வாசன் வழியில் திரைப்படங்களையும் தயாரித்து வெற்றி கண்டவர். திறமையாளர்களைத் தேடிக் கண்டறிந்து ஊக்கப்படுத்தும் எண்ணம் கொண்டவராக திகழ்ந்தார். தமிழகம் கொண்டாடுகிற ஜெயகாந்தன், சுஜாதா போன்ற ஆளுமைகளின் படைப்புகள் இடம்பெறுவதற்கான களமாக ஆனந்த விகடனை உருவாக்கினார்.

1987-ஆம் ஆண்டு ஆனந்த விகடனில் சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் தொடர்பான நகைச்சுவை துணுக்கு வெளியானதற்காக சிறைபட நேர்ந்த போதும் தம் மீதான நடவடிக்கையை எதிர்த்து நீதிமன்றத்தில் போராடி வென்று பத்திரிகை சுதந்திரத்தை நிலைநாட்டியவர். பத்திரிகை சுதந்திரத்துக்கு முன்னோடி வழக்காக இன்றளவும் அவர் தொடர்ந்த வழக்கே இருந்தும் வருகிறது.

ஜூனியர் விகடன் போன்ற அரசியல் விமர்சன- புலனாய்வு இதழ்களை உருவாக்கி தமிழ் பத்திரிகை உலகத்துக்கு புதிய பாதையை ஏற்படுத்திக் கொடுத்தவர். 1980களில் தமிழீழ விடுதலைப் போர் பற்றிய செய்திகளை வெளியிட்டு தமிழர் உள்ளங்களில் ஜூனியர் விகடனை நீங்கா இடம் பெறச் செய்தவர். இளம் தலைமுறையினர் பத்திரிகை துறையில் நுழைவதற்கான வாசலாக 'மாணவர் பத்திரிகையாளர்' திட்டத்தை உருவாக்கியவர்.

தமிழ் பத்திரிகை துறையின் ஜாம்பவானாக திகழ்ந்த "விகடன்" குழும தலைவர் பாலசுப்பிரமணியன் மறைவுக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பண்ருட்டி தி.வேல்முருகன்
தலைவர்,
தமிழக வாழ்வுரிமைக் கட்சி

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP