தமிழக காவல் துறையில் தமிழகத்தை சேர்ந்த அதிகாரிகளை முக்கிய பதவிகளில் நியமிக்க வேண்டும் - தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி.வேல்முருகன்கோரிக்கை
வெள்ளி, 5 டிசம்பர், 2014
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் நெல்லையில் அளித்த பேட்டி:
முல்லை பெரியாறு அணையில் 142 அடி தண்ணீர் தேக்குவதற்கு, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நீதிமன்றத்தில் வாதாடி வெற்றி பெற்றார். இதற்கு கட்சி சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் 152 அடி வரை தண்ணீர் தேக்குவதற்கு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அனைத்து கட்சி தலைவர்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
கர்நாடகாவில் காவிரி நதியின் குறுக்கே அணைகட்டுவதை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும். கர்நாடக நீர்பாசன அமைச்சரின் பேச்சு கண்டனத்துக்குரியது. தொடர்ந்து கர்நாடக அரசு தமிழக அரசுக்கு எதிராக செயல்பட்டால் போராட்டத்தில் ஈடுபடுவோம். . இலங்கை அதிபர் ராஜபக்ஷேவை கண்டிக்க வேண்டும் என்று வலியுறுத் திய வைகோவை விமர்சித்து பேசிய சுப்பிரமணியன்சுவாமி, ஹெச்.ராஜா ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களின் படகு களை பறித்து, அவர்களை இலங்கை அரசு கைது செய்து வருகிறது. அவ்வாறு கைது செய்யப்பட்டவர்களை உடனே விடுவிக்க வேண்டும். கடந்த நவம்பர் 27ம் தேதி மாவீரர் தினம் அனுசரித்தற்காக சென்னையில் திராவிடர் விடுதலை கழகத்தின் நிர்வாகி உமாபதியை போலீசார் கைது செய்து கொடூரமாக தாக்கினர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட எஸ்ஐ மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்ய வேண்டும்.
தமிழகத்தில் தமிழர் நலனுக்காக குரல் கொடுக்க முடியவில்லை. காரணம் தமிழணர்வை புரிந்து கொள்ள கூடிய ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் இல்லை. வட மாநிலத்தவர்கள் தான் அதிகாரிகளாக உள்ளனர். அவர்களை மாற்றி விட்டு, தமிழகத்தை சேர்ந்த அதிகாரிகளை முக்கிய பதவிகளில் நியமிக்க வேண்டும். நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் நடக்கும் சாதிய கொலைகளை தடுத்து நிறுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக