Blogger இயக்குவது.

திட்டக்குடி வைத்தியாதசுவாமி கோவில் திருக்குள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் அறநிலையத்துறை ஆணையரிடம் மனு

திங்கள், 8 டிசம்பர், 2014

திட்டக்குடி வைத்தியாதசுவாமி கோவில் திருக்குள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் அறநிலையத்துறை ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

திட்டக்குடி அசனாம்பிகை உடனுறை வைத்தியநாதசுவாமி கோவில் கும்பாபிஷேகம் வரும் ஜனவரி 26ம் தேதி நடக்க உள்ளதால் திருப் பணிகள் முழுவீச்சில் நடக்கிறது. இதனை இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் தனபால், நேற்று முன்தினம் நேரடியாக பார்வையிட்டார். திருக்குள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி தமிழக வாழ்வுரிமை
க் கட்சி மங்களூர் கிழக்கு ஒன்றியசெயலர் சுரேந்தர் தலைமையில் நிர்வாகிகள், ஆணையரிடம் மனு அளித்தனர்.

அறநிலையத்துறை ஆணையரிடம் அளிக்கப்பட்ட மனு விபரம்:

திட்டக்குடி அசனாம்பிகை உடனுறை வைத்தியநாதசுவாமி கோவிலுக்குச் சொந்தமான 24 புண்ணிய தீர்த்தங்கள் கொண்ட திருக்குளம், 30 ஆண்டுகளாக பணபலம் மிகுந்வர்களின் ஆக்கிரமிப்பில் உள்ளது. திருக்குளத்தில் இருந்து புண்ணிய நீர் எடுத்து கும்பாபிஷேகம் செய்தால் தான் ஊர் வளர்ச்சி பெறும். எனவே திருக்குள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து திருக்குளத்தைப் பார்வையிட்ட ஆணையர் தனபால், குளத்தின் உண்மையான அளவையும், தற்போதுள்ள அளவையும் அளந்து ஒரு வார காலத்திற்குள் அறிக்கை சமர்பிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP