Blogger இயக்குவது.

தர்மபுரி அடுத்த சாமிசெட்டிப்பட்டி கோவில் தொடர்பாக ஏற்பட்ட கலவரம் குறித்து நீதி விசாரணை நடத்த தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் கோரிக்கை

வியாழன், 4 டிசம்பர், 2014

தர்மபுரி அடுத்த சாமிசெட்டிப்பட்டி கோவில் தொடர்பாக ஏற்பட்ட கலவரம் குறித்து, நீதி விசாரணை நடத்த வேண்டும்,'' என, தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் தர்மபுரியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

தர்மபுரி அடுத்த சாமிசெட்டிப்பட்டியில், கந்தசாமி முருகர் கோவில் தொடர்பாக, சில தினங்களுக்கு முன், ஒரு பிரிவினர், தங்களது கோரிக்கை குறித்து ஊர்வலமாக சென்று, ஆட்சியரிடம் மனு கொடுக்க இருந்தனர். இதற்கு தடை விதித்த காவல்துறையினர், அவர்களை கைது செய்தனர். அன்று மாலை விடுதலை செய்யப்பட்ட அவர்கள், ஊருக்குள் வரும்போது, மற்றொரு பிரிவினர், அவர்களை கேலி செய்து தாக்கினர். இதை தடுக்க, அங்கு பாதுகாப்பில் இருந்த காவல்துறையினர், நடவடிக்கை எடுக்கவில்லை. தாக்குதலுக்கு உள்ளானவர்கள், ஆத்திரத்தில், ஒரு கடையை அடித்து நொறுக்கினர். இதற்காக சிலரின் தூண்டுதல் பேரில், காவல்துறையினர், வீடுகளுக்குள் புகுந்து பெண்கள் மற்றும் மாணவர்களை தாக்கி, இவ்வழக்கில் தொடர்பு இல்லாதவர்களையும் கைது செய்து வருகின்றனர்.

ஆனால், மற்றொரு தரப்பினர் மீது, காவல்துறையினர் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. காவல்துறையினர், இத்துடன் தங்களது கைது நடவடிக்கையை நிறுத்திக் கொள்ள வேண்டும். அப்பாவி பொதுமக்களை கைது செய்யக்கூடாது. இதுகுறித்து, ஆர்.டி.ஓ., தலைமையில் நீதி விசாரணை நடத்த, மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும்.இல்லை என்றால், இப்பிரச்சனை தொடர்பாக, சென்னையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் போராட்டம் நடத்தப்படும்.



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP