இந்திய-சிங்களக் கூட்டுப் படைகளால் தமிழீழ மண்ணில் இனப்படுகொலை செய்து
கொள்ளப்பட்ட தமிழீழ மக்களை நினைவேந்தும் விதமாக, உலகத் தமிழர் பங்களிப்போடு
தஞ்சை -விளாரில் உருவாக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் முற்றத்தின்
நினைவுப் பூங்காவையும், அதன் சுற்றுச்சுவரையும் சட்டவிரோதமாக இடித்துத்
தள்ளி, அய்யா பழ.நெடுமாறன் உள்ளிட்ட
தலைவர்களை சிறையில் அடைத்திருக்கும் தமிழக அரசின் வன்செயலைக் கண்டித்து
தமிழகமெங்கும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகின்றன.
நாள்: 16.11.2013 (சனிக்கிழமை)
இடம்: வள்ளுவர் கோட்டம்,
நேரம்: காலை: காலை 10 மணி
கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கும் கட்சிகள், இயக்கங்கள், அமைப்புகள் விபரம்:
தமிழக வாழ்வுரிமைக் கட்சி,
மனித நேய மக்கள் கட்சி,
எஸ்.டி.பி.ஐ.,
தந்தை பெரியார் தி.க,
தமிழ்நாடு மக்கள் கட்சி,
மே பதினேழு இயக்கம்,
சேவ் தமிழ்ஸ் இயக்கம்,
தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்,
தமிழ்த் தேசக் குடியரசுக் கட்சி,
தமிழ்த் தேச மக்கள் கட்சி,
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை,
தமிழ்த் தேசக் குடியரசு இயக்கம்,
தமிழர் குடியரசு முன்னணி,
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி நிகழ்வை ஒருங்கிணைக்கிறது.
இந்நிகழ்வில், தமிழின உணர்வாளர்கள் திரளாகக் கலந்து கொள்ள வேண்டுமென அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்!
Read more...