ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் இலங்கை அரசுக்கு எதிராக தீர்மானம் கொண்டுவர வலியுறுத்தி தமிழ்நாடு மாணவர் இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் - தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் பங்கேற்பு
வியாழன், 27 பிப்ரவரி, 2014
தமிழ்நாடு மாணவர் இயக்கம் சார்பாக இலங்கை அரசு
புரிந்த போர்க்குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள், இனக்கொலைக்
குற்றங்கள் மீதான தற்சார்புள்ள பன்னாட்டு புலனாய்வு ஒன்றை நடத்த வேண்டும்.
ஈழத்தமிழர்களிடையே பொதுவாக்கெடுப்பு நடத்தி அரசியல் தீர்வு காண வேண்டும் என்று மனித உரிமை மன்றத்தில் தீர்மானம் கொண்டு வர இந்திய அரசை வலியுறுத்தி
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் 26.02.2014 அன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு
மாணவர் இயக்கத்தின் சென்னை மாவட்ட செயலாளர் தோழர் இளையராஜா தலைமை
தாங்கினார். தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர்
பண்ருட்டி தி.வேல்முருகன், சத்ரியன் து.வேணுகோபால், சைதை சிவா, தேவராஜ்,
அப்துல்லா, தமிழ்நாடு மக்கள் கட்சியின் தலைவர் தோழர் தங்க தமிழ்வேலன்,
திராவிடர் விடுதலை
கழகத்தின் தலைவர் தோழர் கொளத்தூர் மணி, தந்தை பெரியார் தீரவிடர் கழகத்தின்
பொது செயலாளர் தோழர் கோவை ராமகிருஷ்ணன் மற்றும் பல்வேறு கட்சிகளின்,
இயக்கங்களின் தலவர்களும், பல்வேறு மாணவர் இயக்கங்களின் பிரதிநிதிகளும்
கலந்து கொண்டு கோரிக்கையை வழியுறுத்தி பேசினர். இந்த ஆர்ப்பாட்டத்தில்
300க்கும் மேற்பட்ட மாணவர்கள் திரண்டு கோரிக்கைகளை வழியுறுத்தி முழக்கங்கள்
எழுப்பினர்.