Blogger இயக்குவது.

கோயம்பேடு மார்க்கெட் பின்புறம் ‘ஏ’ ரோடு பகுதியில் 4 டாஸ்மாக் மதுக்கடைகளை அகற்ற கோரி தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் முற்றுகைப் போராட்டம்

புதன், 2 ஜூலை, 2014


கோயம்பேடு மார்க்கெட் பின்புறம் ‘ஏ’ ரோடு பகுதியில் 4 டாஸ்மாக் மதுக்கடைகளை அகற்ற கோரி தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.

கோயம்பேடு மார்க்கெட் பின்புறம் ‘ஏ’ ரோடு பகுதியில் 4 டாஸ்மாக் மதுக்கடைகள் உள்ளன. இந்த ரோட்டையொட்டி ஏராளமான வீடுகள் இருக்கிறது. இங்குள்ள பொது மக்களுக்கு ‘டாஸ்மாக்’ கடைக்கு மது அருந்த வருபவர்களால் பெரும் இடைஞ்சல் ஏற்பட்டது. பள்ளி செல்லும் மாணவ–மாணவிகள் பாதுகாப்பாக செல்ல முடியாத சூழ்நிலை உருவானது. இந்த கடைகளை அப்புறப்படுத்த கோரி பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை.

இதனால் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலாளர் சத்ரியன் து.வெ. வேணுகோபால் தலைமையில் 100–க்கும் மேற்பட்டோர் நேற்று (01.07.2014) காலை 10 மணிக்கு கோயம்பேட்டில் 4 மதுக்கடைகளின் முன்பும் முற்றுகை போராட்டம் நடத்தினர். மதுக்கடைகளை மூட வலியுறுத்தி கோஷமிட்டு மறியலிலும் ஈடுபட்டனர். இதில் ஏராளமான பெண்களும் பங்கேற்றனர். இதை பார்த்த டாஸ்மாக் கடைக்காரர்கள் அவர்களாகவே மதுக்கடைகளை மூடினர்.

கோயம்பேடு உதவி கமிஷனர் அய்யப்பன், ஆய்வாளர் சாம்வின்சென்ட் போலீசாருடன் சென்று மறியலில் ஈடுபட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலாளர் சத்ரியன் து.வெ. வேணுகோபால், துணை தலைவர் வாசுதேவன், மாவட்ட செயலாளர் முத்து ராஜ், பகுதி செயலாளர் வீரராகவன், மகரளிரணி வெள்ளையம்மாள், தேவராஜ், சரவணன், அப்துல் சபீக், மேகவர்ணன், வட்ட செயலாளர் வெங்கடேசன், வேல்முருகன், ஜான்சன் மற்றும் 50 பெண்கள் உட்பட உள்பட 100–க்கும் மேற்பட்டோ ராய் கைது செய்து
நெற்குன்றம் ராணி திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

பின்னர் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலாளர் சத்ரியன் து.வெ. வேணுகோபால் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:


கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் தேவையான ரேஷன் கடை கிடையாது. ஆனால் 4 மதுக்கடை உள்ளது. இதை சுற்றிலும் நிறைய வீடுகள் உள்ளன. டாஸ்மாக் கடைகளை அகற்றி கோரி கடந்த பிப்ரவரி மாதம் முதல் 3 முறை ஆர்ப்பாட்டம் நடத்தினோம். மதுக்கடைகளை அகற்றி விடுவதாக அதிகாரிகள் எழுதி கொடுத்தனர். ஆனாலும் கடை இன்னும் செயல்படுகிறது. இதனால் இன்று 4–வது தடவையாக முற்றுகை போராட்டத்தில் ஈடுபட வேண்டி உள்ளது. இனிமேலும் கடைகளை அகற்றாவிட்டால் துடைப்பத்துடன் மகளிர் அணியினர் போராடுவார்கள்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP