Blogger இயக்குவது.

கிருஷ்ணகிரி படேதலாவ் ஏரி கால்வாய் திட்டத்தை போர்கால அடிப்படையில் நிறைவேற்ற கிருஷ்ணகிரி தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மத்திய மாவட்ட செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்

புதன், 9 ஜூலை, 2014

கிருஷ்ணகிரியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மத்திய மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது.

செயற்குழு கூட்டத்திற்கு பொன்னுசாமி தலைமை வகித்தார். நிர்வாகிகள் மைனா ரவி, நாகராஜ், ராமு(எ)ராமசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் தீபம் சீனிவாசன் வரவேற்றார். பச்சப்பன், ராஜேந்திரன், தேவராஜ், ஜான்ஜோசப், வினோத்குமார், புஷ்பராஜி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மாநில துணை பொதுச்செயலாளர் விஜயகுமார், மாநில செயற்குழு உறுப்பினர் பாரதி ராமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

1. கிருஷ்ணகிரியில் 22.07.2014 அன்று நடைபெறவுள்ள ஒருங்கிணைந்த மாவட்ட செயற்குழு கூட்டத்தை சிறப்பாக நடத்துவது,

2. ஆகஸ்ட் மாதம் 22ம் தேதிக்குள் 200 கிராம கிளைகளில் கொடியேற்றுவது,

3. நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவிற்கு பெருவாரியான வாக்குகள் அளித்து வெற்றி பெறச் செய்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்துகொள்வது,

4. கிருஷ்ணகிரி படேதலாவ் ஏரி கால்வாய் திட்டத்தை போர்கால அடிப்படையில் நிறைவேற்றிட தமிழக அரசை கேட்டுக்கொள்வது

என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. நகர செயலாளர் விஜயகுமார் நன்றி கூறினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP